\
This is my rebirth says Vadivukkarasi
VadivukkarasiCon City

"நான் உங்கள்முன் நிற்பதே மறுபிறவிதான்!" - வடிவுக்கரசி Vadivukkarasi | Con City

பல ஆண்டுகளுக்குப் பிறகு, `வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்' என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன்.
Published on

ஹரீஸ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி நடிப்பில் உருவான படம் `கான் சிட்டி'. இப்படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய நடிகை வடிவுக்கரசி, "நான் இன்று உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல. அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயம் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே, நான் இதைப் பகிர்கிறேன். எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணிரத்னம் சார், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், ஏ.சி.எஸ். சண்முகம், சரத்குமார் சார், ராதிகா உள்ளிட்ட பலர். அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள். இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
வடிவுக்கரசி
நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை. ஆனால், இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன்.
வடிவுக்கரசி

இன்று `கான் சிட்டி' திரைப்படத்தின் 25-ஆவது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25-ஆவது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணம் ரசிகர்களும், ஊடக நண்பர்களும்தான். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை. ஆனால், இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு, `படம் நன்றாக இருந்தால் பார்ப்போம்” என்று நினைத்தவர்கள், படம் பார்த்த பிறகு ஒரு நிமிடம்கூட சலிக்காமல் முழுப் படத்தையும் ரசித்தோம்' என்று கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

This is my rebirth says Vadivukkarasi
ஜனநாயகனில் அரசியல் குறியீடுகள் வருவதை விஜய் சார் விரும்பவில்லை! - ஹெச் வினோத் | H Vinoth

பல ஆண்டுகளுக்குப் பிறகு, `வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்' என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன. ஆனால், ஊடக நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. “வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்” என்று மட்டும் எழுதாமல், “இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதுங்கள். அந்த ஒரு வரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத் தரும். இந்தப் படத்தின் மூலம் என்னை வேறு கோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். `வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார்' என்ற எண்ணத்தை உடைத்து, எனக்கு நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்து, ரசிகர்களிடம் புதிய வரவேற்பைப் பெற்றுத் தந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்." என்றார்.

விரைவில் புதிய தலைமுறையில் 'புதிய தொடர்கள்'!

உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் எழுதும் மனதைக் கவரும் தொடர்கள், விரைவில் நமது ’புதிய தலைமுறை’யில் இணையதளத்தில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில், திங்கள்தோறும் பி.கே.பழனிக்குமார் எழுதும் ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு’ம், புதன்தோறும் டாக்டர் வி.அமுதன் எழுதும் ’சக்கரங்கள் சொல்லும் கதை’யும், வெள்ளிதோறும் சுகுணா திவாகர் எழுதும் ’நிறம் மாறும் சினிமா’ ஆகிய தொடரும் இடம்பெற இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com