Vijay Sethupathi Gandhi Talks
கோலிவுட் செய்திகள்

கமலின் `பேசும் படம்' போல விஜய் சேதுபதி நடித்துள்ள மௌனப்படம்! | Gandhi Talks | VJS

A.R. ரஹ்மான் அவர்களின் இசையே இந்த படத்தின் குரலாக மாறியது.

Johnson

விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிப்பில் கிஷோர் பெலேகர் இயக்கியுள்ள படம் `காந்தி டாக்ஸ்'. இப்படத்திற்கு A.R. ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’காந்தி டாக்ஸ்’,  வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையைச் சொல்லும். அதாவது, கமல்ஹாசன் நடிப்பில் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கிய `பேசும் படம்' போல Silent Film. விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் என ஒரு மௌன திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது கவனிக்கத்தக்கது.

காந்திய சிந்தனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பற்றி இயக்குநர் கிஷோர் பெலேகர் கூறியபோது, “காந்தி டாக்ஸ் என்பது மௌனத்தின் மீது வைத்த நம்பிக்கை. இந்திய சினிமா நூற்றாண்டை கடந்த இந்த வேளையில், அதன் அடிப்படை வடிவமான தூய நடிப்பும் உணர்ச்சியும் கொண்ட கதைச் சொல்லலுக்குத் திரும்ப விரும்பினோம். நடிகர்கள் அந்த வெளிப்படைத்தன்மையை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். A.R. ரஹ்மான் அவர்களின் இசையே இந்த படத்தின் குரலாக மாறியது” என்றார். 30 ஜனவரி 2026 அன்று வெளியாக உள்ளது `காந்தி டாக்ஸ்'.