Vijay Sethupathi Vikram Vedha
கோலிவுட் செய்திகள்

"விஜய், அஜித் சார் ரேஞ்சுக்கு எனக்கு பில்டப்.." - விஜய் சேதுபதி சொன்ன சம்பவம் | Vijay Sethupathi

’விக்ரம்’ படத்தில் நான் தொந்தியும், தொப்பையுமாய் சுற்றி டயர் இருப்பது போல வயிறு இருக்கிறது, கலாய்த்து விடுவார்கள் என பயந்தேன்.

Johnson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது, `முத்து என்கிற காட்டான்' வெப் சீரிஸ் மார்ச் 27 ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக பல பேட்டிகளை அளித்து வருகிறார் விஜய் சேதுபதி.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், உங்கள் படங்களில் உங்களுக்கு பிடித்த அறிமுக காட்சிகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொன்னவர், " `விக்ரம் வேதா' படத்தில் என்னுடைய அறிமுக காட்சி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை எடுத்த பின்னர் எனக்கு புஷ்கர் காயத்ரி போட்டு காண்பித்தார்கள். இவ்வளவு பில்டப் ஓவராக இருக்கிறது. இதைக் குறைத்துவிடுங்கள். விஜய் சார், அஜித் சார் ரேஞ்சுக்கு பில்டப் இருக்கிறது. அது நான் இருக்கையில் சுவாரஸ்யமாக இருக்குமா என யோசித்தேன். ஆனால் புஷ்கர் காயத்ரி ரொம்பவும் நம்பினார்கள். அது நடந்தது.

Vikram

இன்னொரு படம் `விக்ரம்'. அதுவும் லோகேஷின் நம்பிக்கைதான். நான் தொந்தியும்,தொப்பையுமாய் சுற்றி டயர் இருப்பதுபோல வயிறு இருக்கிறது, கலாய்த்து விடுவார்கள் என பயந்தேன். இதை நான் லோகேஷிடம் சொன்னபோது கிராஃபிக்ஸில் அதனை மாற்றுவார்கள் என நினைத்தேன். லோகேஷும் கண்டிப்பாக அதைக் கவனிக்கிறேன் என்றார். ஆனால் காட்சியைப் பார்த்ததும் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. எனவே, எந்த மாற்றமும் அவர்கள் செய்யவில்லை. கூடவே `ஆண்டவன் கட்டளை', `விடுதலை' போன்ற படங்களிலும் என்னுடைய அறிமுக காட்சி எனக்குப் பிடிக்கும்" என்றார்.