Sinners, One Battle After Another
Sinners, One Battle After Another98th Oscar

விருதுகளை அள்ளிய படம், சாதனை பெண், விருது பெற வராத நடிகர்... ஆஸ்கரில் 6 சுவாரஸ்யங்கள்! | Oscar

சிறந்த பின்னணி இசைக்காக பரிந்துரைக்கப்பட்ட இருமுறையும் (Black Panther, Oppenheimer) விருது வென்றார் Ludwig Göransson. இது இவருக்கு மூன்றாவது ஆஸ்கர்.
Published on

எதிர்பார்த்தது போலவே `One Battle After Another' மற்றும் `Sinners' இடையில் தான் பலத்த போட்டி இருந்தது. இதில் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் தேர்வு, சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படம் என மொத்தம் 6 விருதுக்களை அள்ளியது Paul Thomas Anderson இயக்கிய `One Battle After Another'. Ryan Coogler இயக்கிய `Sinners' 16 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது.

Autumn Durald Arkapaw
Autumn Durald Arkapaw

Sinners படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றார் Autumn Durald Arkapaw. இதில் கூடுதல் தகவல் என்ன என்றால் 98 வருட ஆஸ்கர் வரலாற்றில் முதன் முறை விருது பெறும் பெண் ஒளிப்பதிவாளர் இவர் தான். இவருக்கு முன்பு Rachel Morrison (Mudbound), Ari Wegner (The Power of the Dog), மற்றும் Mandy Walker (Elvis) ஆகிய மூவர் தான் பரிந்துரை வரை வந்தனர்.

Ludwig Göransson
Ludwig Göransson

சிறந்த பின்னணி இசைக்கான விருது பெற்றுள்ளார் Ludwig Göransson. இதற்கு முன்னர் சிறந்த பின்னணி இசைக்காக பரிந்துரைக்கப்பட்ட இருமுறையும் (Black Panther, Oppenheimer) விருது வென்றார். இது இவருக்கு மூன்றாவது ஆஸ்கர். அடுத்த ஆஸ்கரிலும் நோலனின் ஒடிசி படத்திற்காக வாங்கிவிடுவார் என அடித்து சொல்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Sinners, One Battle After Another
ஆஸ்கர் வெற்றியாளர்களின் முழுபட்டியல் | Sinners | One Battle After Another | 98th Oscars
Sean Penn
Sean Penn

சிறந்த துணை நடிகர் விருதை One Battle After Another படத்துக்காக வென்றார் Sean Penn. இதற்கு முன் `Mystic River', `Milk' ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கிறார் சீன். ஆனால் இந்த முறை விஷயம் என்ன என்றால் விருது வாங்க சீன் வரவில்லை. 

Jessie Buckley, Michael B. Jordan
Jessie Buckley, Michael B. Jordan

Michael B. Jordan சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 2000த்திலிருந்து நடித்துக் கொண்டிருக்கும் மைக்கேலின் முதல் ஆஸ்கர் பரிந்துரை இதுதான். முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்தது போல, முதல் முறையிலேயே ஆஸ்கரை தட்டி தூக்கிவிட்டார். சிறந்த நடிகை விருது வென்ற Jessie Buckley, முன்பு The Lost Daughter படத்திற்காக துணைநடிகை விருதுக்கு பரிந்துரை வரை சென்றார். இப்போது முதல் ஆஸ்கரிலேயே சிறந்த நடிகை விருது. மேலும் ஆஸ்கர் வெல்லும் முதல் ஐரிஷ் நடிகை இவர் தான்.

Paul Thomas Anderson
Paul Thomas Anderson

One Battle After Another படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை பெற்றுள்ளார் Paul Thomas Anderson. இதுதான் இவரது முதல் ஆஸ்கர். 96ல் இருந்து படங்களை இயக்கி வருகிறார் பால். 98ல் இருந்து திரைக்கதை, படம், இயக்குநர் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் பரிந்துரை வரை சென்றவருக்கு விருது கிடைக்க 28 ஆண்டுகள் ஆகியுள்ளது.

Sinners, One Battle After Another
ஆஸ்கர் வெற்றியாளர்களின் முழுபட்டியல் | Sinners | One Battle After Another | 98th Oscars

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com