Vijay Sethupathi Muthukumar
கோலிவுட் செய்திகள்

நண்பனுக்கு Birthday Surprice தந்த விஜய் சேதுபதி! | Vijay Sethupathi

இவர் ராதிகாவின் `தாய் கிழவி' படத்தில் ஜவகர்லால் நேரு என்ற பாத்திரத்தில் நடித்தார். அவரது பாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

Johnson

தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர் முத்துக்குமார். ஆரம்ப காலகட்டங்களில் வேட்டையாடு விளையாடு போன்ற சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய `பேட்ட' படம் மூலம் நல்ல கவனம் கிடைத்தது. தொடர்ந்து `சார்பட்டா பரம்பரை', `மகான்', `தங்கலான்' பிற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் இவர் ராதிகாவின் `தாய் கிழவி' படத்தில் ஜவகர்லால் நேரு என்ற பாத்திரத்தில் நடித்தார். அவரது பாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கூத்து பட்டறையில் நடிப்பு பயின்ற இவரும், விஜய் சேதுபதியும் நண்பர்கள். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த `காட்டான்' வெப் சீரிஸிலும் முத்துக்குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முத்துக்குமாருக்கு பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சர்ப்ரைஸாக நடிகர் விஜய் சேதுபதி நேரடியாக வீட்டு சென்று முத்துக்குமாரை வாழ்த்தி இருக்கிறார். இது பற்றி பதிவிட்ட முத்துக்குமார் "நண்பன் *நடிகர் விஜய் சேதுபதி* - யுடனான எனது நட்பு கூத்துப் பட்டரையிலிருந்து தொடர்கிறது. நேற்று (24/04/2026 ) எவ்வித முன்னறிவிப்புமின்றி எனது இல்லத்திற்கே வந்து, எனக்கு *பிறந்தநாள் வாழ்த்துக் கூறி*, என்னையும் எனது குடும்பத்தினரையும்  பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய நண்பன் விஜய்சேதுபதிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! உனது பேரன்புக்கு பெருநன்றி நண்பா!" எனக் குறிப்பிட்டிருந்தார்.