Vijay Devarakonda DC
கோலிவுட் செய்திகள்

DCயில் நடிக்க வேண்டியது விஜய் தேவரகொண்டாவா? | Vijay Devarakonda | Arun Matheshwaran

நானும் அருண் மாதேஸ்வரனும் சந்தித்தோம். அவர் என்னிடம் ஒரு சுவாரஸ்யமான ஐடியாவை கூறினார்.

Johnson

லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடித்த அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘DC’ படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் முதலில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடிக்க இருந்ததாக தகவல். ‘கிங்டம்’ படத்துடன் ஒத்த சாயல் காரணமாக அவர் கதையை நிராகரித்ததாக பழைய பேட்டி மீண்டும் வைரலாகி, நல்ல பட வாய்ப்பை இழந்தார் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி நேற்று வெளியான படம் `DC'. இந்தப் படம் மெல்லாம் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். லோகேஷ் கனகராஜின் நடிப்பும் பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா என சொல்லப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப் படம் `கிங்டம்'. இந்தப் பட சமயத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "நானும் அருண் மாதேஸ்வரனும் சந்தித்தோம். அவர் என்னிடம் ஒரு சுவாரஸ்யமான ஐடியாவை கூறினார். ஆனால் அது நான் செய்து கொண்டிருக்கும் ஒரு படத்தின் சாயலில் இருந்ததால், அதில் மறுத்துவிட்டேன். அவருடன் பணியாற்ற எனக்கும் மிகுந்த ஆர்வம். இப்போது செய்து கொண்டிருக்கும் படத்தின் சாயலில் இருந்தது தான் பிரச்சனை." எனக் கூறி இருந்தார்.

Kingdom

அந்த வீடியோவை இப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, விஜய் தேவரகொண்டா சொல்லும் அந்தப் படம் தான் DC என்பது மாதிரி சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்துள்ளது. கூடவே விஜய் தேவரகொண்டா அருண் மாதேஸ்வரன் சொன்னது போன்றே ஒரு கதையில் நடித்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியது `கிங்டம்' படம் பற்றி தான் எனவும் சொல்லப்படுகிறது. கிங்டம் தோல்வி அடைந்ததையும், இப்போது DC க்கு கிடைத்துள்ள வரவேற்பையும் ஒப்பிட்டு நல்ல படத்தை விஜய் தேவரகொண்டா இழந்துவிட்டார் என எழுதி வருகின்றனர்.