டா-இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனமான International Institute of Film and Calture வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தகவலியல் துறையுடன் இணைந்து இயக்குநர் பாரதிராஜாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்த உள்ளது. 'தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் பாரதிராஜாவின் படங்கள் திரையிடப்படுகிறது. அப்படங்கள் குறித்த விவாதங்களும், உரையாடலும் இந்நிகழ்வில் நடைபெறவுள்ளது.
இந்திய திரை ஆளுமை இயக்குநர் பாலு மகேந்திராவின் படைப்புகளை கொண்டாடும் விதமாக, சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வை வெற்றிமாறனின் IIFC நடத்தியது. அதனை தொடர்ந்து இப்போது இயக்குநர் பாராதிராஜாவிற்கான நிகழ்வை நடத்த இருக்கிறார்கள். நவம்பர் 7ம் தேதி துவங்கும் இந்நிகழ்வு 11ம் தேதி வரை நடைக்கிறது. ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜாவின் '16 வயதினிலே', 'கிழேக்கே போகும் ரயில்', 'புதிய வார்ப்புகள்', 'நிழல்கள்', 'அலைகள் ஓயவதில்லை', 'மண் வாசனை', ஒரு கைதியின் டைரி', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'கிழக்கு சீமையிலே' ஆகிய படங்கள் திரையாகவுள்ளன.
இப்படங்களின் திரையிடல் மட்டுமில்லாது, அதில் இடம்பெற்ற திரைக் கலைஞர்கள் பங்கேற்று, பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். நிகழ்வு நடக்கும் அத்தனை நாட்களிலும் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொள்கிறார். இயக்குநர் அமீர், சத்யராஜ், 'கடலோர கவிதைகள்' நாயகி ரேகா, ஆர்.கே.செல்வமணி, சேரன் உள்பட பலரும் இதில் பங்கேற்க உள்ளனராம்.