Venkat K Narayana Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் பதில் | Jana Nayagan | Vijay | Venkat K Narayana

சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை வெளியீடு பற்றிய தகவல் எதுவும் இல்லாமல் முடங்கி இருக்கிறது.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வர இருந்து சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை வெளியீடு பற்றிய தகவல் எதுவும் இல்லாமல் முடங்கி இருக்கிறது. நடிகர் விஜய் இப்போது முதலமைச்சர் விஜய் ஆகிவிட்டார். எனவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Jana Nayagan

இன்று திருச்செந்தூர் சாமி தரிசனத்துக்கு ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா சென்றார். அங்கு செய்தியாளர்கள் ஜனநாயகன் வெளியீடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொன்னவர் "நாங்கள் சான்றிதழ் வருவதற்காக காத்திருக்கிறோம். சீக்கிரமே அது வந்துவிடும் என நம்புகிறோம். கிடைத்த உடன் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவோம்" என்று கூறியுள்ளார்.

கன்னடத்தில் `Sakath', `By Two Love', `Cult', `KD: The Devil' போன்ற படங்களை தயாரித்துள்ளது KVN நிறுவனம். அடுத்து கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள `Toxic' படத்தையும் இதே நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழில் விஜயின் `ஜனநாயகன்' படத்தின் மூலம் அறிமுகமாகும் KVN, மலையாளத்தில் `Manjummel Boys' பட இயக்குநரின் அடுத்த படமான `பாலன்', தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் `Mega158' மற்றும் இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் சைஃப் அலிகான், அக்ஷய்குமார் நடித்துள்ள `Haiwaan' ஆகிய படங்களின் மூலம் அறிமுகமாக உள்ளது.