சந்தோஷ் நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பல பதிவுகளை நீக்கியதற்கான காரணத்தை விளக்கினார். அவர் தனது நண்பரின் மொபைலை பயன்படுத்தி ஸ்க்ரோல் செய்தபோது, புரோஃப்பைல் அழகியலே இல்லாமல் இருந்தது. இதனால், தனது பக்கத்தில் தேவையற்ற பதிவுகளை நீக்கி, முக்கியமான நான்கு பதிவுகளை மட்டும் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் `நோவலே' என்ற பாடலை வெளியிட்டார். தொடர்ந்து பல இசை ஆல்பம் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். திடீரென அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் இருந்த பல பதிவுகள் மாயமானது.
இதைப் பற்றி சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கேட்கப்பட "நான் ஒருமுறை என் நண்பரது மொல்பைலை வாங்கி இன்ஸ்ட்டா ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தேன். அப்போது அந்த புரோஃப்பைல் மிக கேவலமாக இருந்தது. கொஞ்சம் கூட அழகியலே இல்லை, என்னுடைய புரோஃப்பைல் எல்லாம் எப்படி இருக்கும் எனப் பார்த்தால், அது என்னுடைய புரோஃப்பைல் தான்.
பேருந்து நிலைய சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது போல, அலங்கோலமாக இருந்தது. ஆனால் என்னுடைய புரோஃப்பைலில் கொலேப், ரீ போஸ்ட், லைக் என எல்லாம் செய்வேன். அதில் தேவை இல்லாத எல்லாவற்றையும் நீக்கிவிட்டு பார்த்தால் நான்கு போஸ்ட்கள் மட்டுமே மிஞ்சியது. என்னை பின் தொடர்பவர்களை கூட குறைத்துவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.