cinema artists x page
கோலிவுட் செய்திகள்

தமிழ்நாடு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.. பெறப்போகும் சினிமாக் கலைஞர்கள் யார்?

விருது பெற்றவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

Johnson

2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

யேசுதாஸ்

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயமும், அகில இந்திய விருது பெறும் கலைவித்தர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடைபெற உள்ள விழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

இந்த மூன்றாண்டுகளில் சினிமா சார்ந்த கலைஞர்கள் யாருக்கெல்லாம் விருது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்,

2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் சினிமா கலைஞர்கள்:

எஸ்.ஜே.சூர்யா - திரைப்பட நடிகர்

சாய் பல்லவி - திரைப்பட நடிகை

லிங்குசாமி - திரைப்பட இயக்குநர்

ஜெயகுமார் - திரைப்பட அரங்க அமைப்பாளர்

சூப்பர் சுப்பராயன் - திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்

சாய் பல்லவி

2022ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் சினிமா கலைஞர்கள்:

விக்ரம் பிரபு - திரைப்பட நடிகர்

ஜெயா வி.சி.குகநாதன் - திரைப்பட நடிகை

விவேகா - திரைப்படப் பாடலாசிரியர்

டைமண்ட் பாபு - திரைப்பட செய்தித் தொடர்பாளர்

லட்சுமி காந்தன் - திரைப்பட புகைப்படக் கலைஞர்

விக்ரம் பிரபு

2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் சினிமா கலைஞர்கள்:

மணிகண்டன் - திரைப்பட நடிகர்

ஜார்ஜ் மரியான் - திரைப்பட குணச்சித்திர நடிகர்

அனிருத் - திரைப்பட இசையமைப்பாளர்

ஸ்வேதா மோகன் - திரைப்படப் பின்னணிப் பாடகி

சாண்டி (எ) சந்தோஷ்குமார் - திரைப்பட நடன இயக்குநர்

நிகில் முருகன் - திரைப்பட செய்தித் தொடர்பாளர்