சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தமிழ் கதையில் விக்ரம் பிரபு, அக்ஷய்குமார், அனீஷ்மா, ஆனந்தா நடித்த படம் `சிறை'. இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தின் 75வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் பேசினார் எழுத்தாளர், இயக்குநர் தமிழ்.
அவர் பேசுகையில் "சமீபமாக நாம் பெரிய பட்ஜெட்டுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படி ஓடுவதில் பிரச்சனை என்ன இருக்கிறது என்றால், அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங் போக முடியாமல், தியேட்டருக்கு வர முடியாமல் ஒரு நெருக்கடி வந்துவிட்டது. தமிழ் சினிமாவை இந்திய சினிமா திரும்பி பார்த்த காலம் போய், இப்போது நாம் எல்லா சினிமாவை பார்த்து, குறிப்பாக மலையாள சினிமாவை பார்த்து பிரம்மிக்கிறோம். ஏனென்றால் அங்கு மிக சக்திவாய்ந்த எழுத்தாளர்கள் இருக்கின்றனர்.
ஆனால் இந்தியாவிலேயே அதிக எழுத்தாளர்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான். இந்தியாவிலேயே அதிக புத்தகங்கள் விற்பனையாவதும் தமிழ்நாட்டில் தான். ஆனால் நாம் அந்த எழுத்தாளர்களை மதிப்பதும், அழைப்பதும் இல்லை. தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களை கூப்பிடவும், அவர்களின் கதைகளை படமாக்க வேண்டும் என்பது என் விருப்பம். சினிமா என்பது வெறும் சினிமா இல்லை. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வியலாக உள்ளது. எனவே நாம் டிஜிட்டலையும், ஓடிடியையும் நம்பி இருக்காமல், தியேட்டர்களுக்கு படமாக செய்ய வேண்டும்." என்றார்.