Maayavi Suriya, Singam Puli, Sanjay Dutt
கோலிவுட் செய்திகள்

சூர்யா பட ரீமேக்.. சஞ்சய் தத் சொன்ன கதை! - சிங்கம் புலி பகிர்ந்த சுவாரஸ்யம் | Suriya | Sanjay Dutt

தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு பக்கத்து அறையில் நடிகர் சஞ்சய் தத் தங்கி இருந்தார். அப்போது என்னை அவரிடம் அழைத்து சென்று இவர் சிங்கம் புலி, சூர்யாவை வைத்து `மாயாவி' படம் எடுத்திருக்கிறார் என அறிமுகம் செய்து வைத்தார் நட்ராஜ்.

Johnson

சூர்யா, ஜோதிகா நடிப்பில் சிங்கம்புலி இயக்கி 2005ல் வெளியான படம் `மாயாவி'. வெளியான சமயத்தில் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், இப்போது வரை பலரும் ரசிக்கும் காமெடிகள் அப்படத்தில் உள்ளன.

Maayavi

இந்தப் படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்த சிங்கம் புலி "ஒரு முறை புனேவில் நட்ராஜை எதேர்ச்சையாக சந்தித்தேன். அப்போது அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு பக்கத்து அறையில் நடிகர் சஞ்சய் தத் தங்கி இருந்தார். அப்போது என்னை அவரிடம் அழைத்து சென்று இவர் சிங்கம் புலி, சூர்யாவை வைத்து `மாயாவி' படம் எடுத்திருக்கிறார் என அறிமுகம் செய்து வைத்தார் நட்ராஜ். உடனே அது என்ன கதை என சஞ்சய் தத் கேட்கவும் நான் சொன்னேன். நான் தமிழில் சொல்ல சொல்ல, அதனை நட்ராஜ்  இந்தியில் மொழி பெயர்த்து சஞ்சய் தத்திடம் கூறினார்.

15 நிமிடங்கள் கதை கேட்டவர், 'இதில் தாதா நான், பணம் வாங்கிவிட்டு கத்ரினா கைஃபை கடத்திவிட்டேன். யாருக்காக கடத்தினேனோ, அவன் எனக்கு 50 லட்சம் தான் தருகிறேன் எனக் கூறுகிறான். நான் 5 கோடி கேட்கிறேன். இப்போது என்னை சல்மான் கான் தொடர்பு கொண்டு 10 கோடி தருவதாக சொல்லி கத்ரினா கைஃபை விடுவிக்குமாறு சொல்கிறார்.' என அவர் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டார். நான் இந்தப் படம் நடந்து விடும் என்றே நினைத்துவிட்டேன். இந்த மாதிரி சுவாரஸ்யமான சம்பவம் `மாயாவி' படம் மூலம் நடந்தது" என்றார்.