சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (மே 14) வெளியாக இருந்தது. ஆனால், சில பண நெருக்கடி காரணமாக வெளியாவதில் சிக்கல் உருவாகி ஒருநாள் கழித்து மே 15ம் தேதி தான் படம் வெளியானது.
இந்தப் படத்திற்கு திரையரங்கில் பெரிய வரவேற்பு கிடைத்தது. `கருப்பு' படக்குழுவினர் நேற்று முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த வீடியோக்களும், படத்தின் முடிவில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி உணர்ச்சி வசப்பட்டு கத்திய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இப்போது இப்படத்தின் வசூல் விவரங்கள் பற்றி விசாரிக்கையில் தமிழ்நாட்டில் இப்பட முதல் நாள் 14 கோடி (Gross) என தகவல். மேலும் உலகளவில் 32 கோடி (Gross) இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இது முந்தைய சூர்யா படங்களின் முதல் நாள் வசூலில் இருந்து குறைவு தான் என்றாலும், படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சொன்ன தேதியில் படம் வெளியாகி இருந்தால் இந்த வசூல் நிச்சயம் சூர்யாவின் முந்தைய பட முதல் நாள் வசூலை முறியடித்திருக்கும் எனவும் சினிமா வட்டாரங்களில் சொல்கின்றனர்.