\
Premkumar next movie with Fahad Faasil is Official  Now
Fahad Faasil, PremkumarNew Movie

பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் ஃபாசில், வெளியான அறிவிப்பு! | Fahad Faasil | Premkumar

பிரேம்குமார் அடுத்தாக 96' படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவார் எனவும், பின்னர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படங்கள் நடக்கவில்லை.
Published on

96’, மெய்யழகன் போன்ற படங்களை இயக்கியவர் பிரேம்குமார். இரு படங்களும் விமர்சன ரீதியாக அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த இரு படங்களுக்கும் தனியாக பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. பிரேம்குமார் அடுத்தாக 96' படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவார் எனவும், பின்னர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படங்கள் நடக்கவில்லை.

பிரேம்குமார் இயக்கும் அடுத்த படத்தில் பஹத் ஃபாசில், ஷிவதா நடிக்கின்றனர் என இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரேம்குமார் அளித்த ஒரு பேட்டியில் இப்படம் பற்றி கூறி இருந்தார். அதில் அடுத்ததாக பஹத் ஃபாசில் நடிப்பில் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார்.

Premkumar next movie with Fahad Faasil is Official  Now
VTV படத்தில் என்னை நடிக்க சொன்னார் GVM.. ஜெய் சொன்ன சம்பவம்!

மேலும் பஹத் சாருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டது. கதையை ஒரு 45 நிமிடங்கள்தான் கூறினேன். சொல்லும் போதே அவரது முகபாவங்கள் மாறுவதை என்னால் உணர முடிந்தது. அது எனக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுத்தது. இது நேரடி தமிழ்ப் பாடமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் ஜனவரியில் துவங்கும்” எனக் அப்பேட்டியில் கூறியிருந்தார் பிரேம். இதற்கு முன்பு பஹத் ஃபாசில் `வேலைக்காரன்', `Super Deluxe', `விக்ரம்', `மாமன்னன்', `வேட்டையன்', `மாரீசன்' போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் அவற்றில் துணை கதாபாத்திரம் அல்லது வில்லன் வேடங்களில் தான் நடித்திருந்தார். பிரேம் இயக்கம் இப்படம் மூலம் தான் அவர் ஒரு முழுநீள தமிழில் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்துக்கு பிரேமின் ஆஸ்தான இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இப்படத்துக்கு இசை. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com