Suriya Suriya 48
கோலிவுட் செய்திகள்

வெளியானது ’Suriya 48’ அறிவிப்பு.. இவர்தான் இயக்குநரா? | Suriya

இப்போது சூர்யாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Johnson

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்'. சூர்யாவின் 46ஆவது படமான இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

`கருப்பு' என்ற பெரிய ஹிட்டுக்கு பின், வரும் படம் என்பதாலும், ’லக்கி பாஸ்கர்’ இயக்குநர் வெங்கி இயக்கி இருக்கிறார் என்பதாலும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்போது சூர்யாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை, கன்னடத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை `ஜெய் பீம்', `வேட்டையன்' படங்களை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்க உள்ளார் எனவும், கயாடு லோஹர் கதாநாயகி எனவும் சொல்லப்படுகிறது. இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஐந்து ரூபாய் டாக்டரை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது எனவும் சொல்லப்படுகிறது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்' வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் `சூர்யா 47' படம் வர இருக்கிறது. இதற்கு அடுத்த படமான `சூர்யா 48' ஆக உருவாகிறது சூர்யா - ஞானவேல் படம். சீக்கிரமே சூர்யா 49 மற்றும் 50 பற்றியும்கூட தகவல் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.