Sasikumar My Lord
கோலிவுட் செய்திகள்

"`My Lord' படத்துக்கு சூர்யா சார் செய்த விஷயம்.." - நெகிழ்ந்த சசிகுமார் | Sasikumar | Suriya

முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

Johnson

சசிகுமார் நடிப்பில் வெளியான 'மை லார்ட்' படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வில், சூர்யா சார் படம் பார்த்து 2D மூலம் ப்ரெசென்ட் செய்ய முன்வந்ததற்கு நன்றி தெரிவித்தார். முதல் நாள் கலெக்ஷன் குறைவாக இருந்தாலும், படம் நல்ல படம் என்பதில் நம்பிக்கை இருந்தது. சனி, ஞாயிறு முதல் படம் பிக்கப் ஆனது, அடுத்த வாரமும் 250 திரைகளில் ஓடவுள்ளது.

சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் `மை  லார்ட்'. இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய சசிக்குமார் "ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைக்க. ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒரு நல்ல படம் அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளும். அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. சனி ஞாயிறில் இருந்து படம் பிக்கப் ஆனது. இனி அடுத்த வாரமும் 250 திரைகளில் ஓடா போகிறது. ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் முதல் வாரத்தை கடந்து, இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது.  

பட ரிலீசுக்கு பிறகு பார்த்து டிவி, ஓடிடியிலும் உரிமையை வாங்கிவிட்டார்கள் என்பதும் மகிழ்ச்சி. மேலும் சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை எங்கள் 2D மூலம் ப்ரெசென்ட் செய்கிறோம் என முன்வந்ததற்கு அவருக்கும் அவருடைய குழுவுக்கும் என் மனப்பூர்வமான நன்றி” என்றார்.