Soori Mandaadi
கோலிவுட் செய்திகள்

சூரியின் `மண்டாடி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Soori | Mandaadi

இப்படம் கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமா படமாக உருவாகியுள்ளது.

Johnson

சூரி, சுஹாஸ் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி உருவாக்கி வரும் படம் `மண்டாடி'. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரிவான மற்றும் சவாலான படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவுசெய்து, படத்தின் Post-Production பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமா படமாக உருவாகியுள்ளது. கடலின் பிரமாண்டமான பின்னணியிலும், பரபரப்பான படகுப் பந்தய உலகத்தையும் கருப்பொருட்களாக கொண்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்துள்ளனர். அதன்படி, ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிகள் குறித்த மேலும் பல முக்கிய அறிவிப்புகள் வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.