SK Parasakthi
கோலிவுட் செய்திகள்

`பராசக்தி'க்கு யு/ஏ... பொங்கல் களத்தில் SOLOவாக SK? | Parasakthi | Sivakarthikeyan

இப்படம் 2 மணிநேரம் 42 நிமிடங்கள் நீளம் எனவும், 16 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் இணைந்து படத்திற்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Johnson

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருந்த நிலையில், யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி 42 நிமிடங்கள் நீளமான இப்படம், 16 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் படம் வெளியீடு உறுதியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது.

இப்படத்தை பார்த்த தணிக்கை வாரியம் பல்வேறு காட்சிகளில் கட் செய்யவும், குறிப்பாக இந்திக்கு எதிரான போராட்டம் சார்ந்த காட்சிகளில் ஆட்சேபம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அவற்றை நீக்கினால் படம் சொல்ல வரும் கருத்தே நீர்த்துப் போய்விடும் என்பதால் மும்பையில் Revising Committeeக்கு சென்றது படக்குழு. 

இந்நிலையில் இன்று இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படம் 2 மணிநேரம் 42 நிமிடங்கள் நீளம் எனவும், 16 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் இணைந்து படத்திற்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே சொன்னபடி படம் ஜனவரி 10 வெளியாகும் என்பது உறுதி. விஜயின் `ஜனநாயகன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது தணிக்கை வாரியம். இந்த வழக்கு இன்று மதியம் 2.30 மணிக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வர உள்ளது. இன்றே தீர்ப்பு வழங்கப்பட்டால் படம் நாளை வெளியாகலாம். அப்படி இல்லை என்றால் சிவகார்த்திகேயனின் பராசக்தி மட்டும் தனியாக நாளை வெளியாகும்.