செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் `மனிதன் தெய்வமாகலாம்'. இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிறையில், இப்படத்திற்கான புரமோஷன் பேட்டிகளை படக்குழுவினர் அளித்து வருகின்றனர். அப்படி ஒரு பேட்டியில், நீங்கள் கைவிட விரும்பும் ஒரு பழக்கம் எது என கேட்கப்பட, அதற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் என பதில் அளித்தார் செல்வராகவன்.
இதுகுறித்து அவர் பேசிய போது, "நான் சொன்னால் சிலர் கேட்கக்கூடும், அதனால்தான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன். இது உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்தானது. 100% இதைச் செய்யாதீர்கள். நான் பலமுறை இதை நிறுத்த முயற்சித்திருக்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயமாக விட்டுவிடுவேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் ஒருபோதும் புகை பிடிக்காதீர்கள்" எனப் பேசினார். செல்வராகவன் புகைபிடித்துக் கொண்டிருந்த ஒரு வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.