Suriya appreciate Neelira movie
SuriyaNeelira

"இது போரை விரும்பாதவர்களுக்கான படம்" - 'நீளிரா'வை பாராட்டிய சூர்யா | Suriya | Neelira

சம காலத்தில் நடைபெறும் போர்களால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது சாதாரண, எளிய மக்கள்தான்.
Published on

சோமிதரன் இயக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள படம் `நீளிரா'. நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், விது, சிந்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன், தார்மீகா, நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்சென்ட் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “ 'நீளிரா' என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். சம காலத்தில் நடைபெறும் போர்களால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது சாதாரண, எளிய மக்கள்தான். ஒரு போர்ச் சூழலில் ஒரு கல்யாணம் நடக்கிறது, அந்த இரவை எப்படி கடக்கிறார்கள், எத்தனைப் பேர் பிழைக்கிறார்கள் என்பதை எமோஷனல் த்ரில்லர் ஆக இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது.

அந்த இரவை உணர்ந்தவர், அந்த இரவை கடந்தவரே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இலங்கை தமிழர் நண்பர் சோமிதரன். கடந்த காலப் போர், இப்ப இருக்கிற சூழல் இதற்கெல்லாம் ஒரு மவுன சாட்சியா இந்தப் படம் நம் எல்லோர் மனசிலும் நிலைச்சு இருக்கும்னு நான் நம்புறேன். இது போரை விரும்பாதவர்களுக்கான படம். நம் தமிழ் சினிமாவில் நிறைய திருமண காட்ச்சிகளை பார்த்திருப்போம். ஆனால், இது ரொம்ப ரொம்ப புதுசு. எனக்கு ரொம்ப பிடிச்சது, உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பேசியுள்ளார்.

Suriya appreciate Neelira movie
போரின் கோரமான உளவியலை பேசும் ’நீளிரா’.. தவறவிடக் கூடாத சினிமா! | Neelira Review

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com