பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக கம்பேக் கொடுக்கும் எஸ் ஜே சூர்யா, 'கில்லர்' படத்தில் முழு கவனத்துடன் ஈடுபட, ஏற்கனவே கமிட் செய்த படங்களை முடித்துக்கொடுத்த நிலையில், புதிய படங்களை எட்டு மாதங்களுக்கு கமிட் செய்யாமல் இருக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
எஸ் ஜே சூர்யா பரபரப்பாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். `இசை' படத்திற்கு பிறகு படமே இயக்காமல் இருந்தவர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராக கம்பேக் கொடுத்து `கில்லர்' படத்தில் பிஸியாக இருக்கிறார். எஸ் ஜே சூர்யாவே ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் இருந்து தன்னுடைய கவனம் சிதறக் கூடாது என்பதற்காக ஒரு விஷயத்தை செய்திருக்கிறாராம் எஸ் ஜே சூர்யா. இதுவரை கமிட் செய்த படங்களின் வேலைகளை முடித்துவிட்டு, அடுத்த எட்டு மாதங்களுக்கு வேறு எந்த புது படத்தையும் கமிட் செய்யாமல் `கில்லர்' பட வேலைகளை செய்ய இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகும் இதில் ஒரு காரும் முக்கிய பாத்திரமாக இருக்கிறதாம். கோகுலம் கோபாலனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யாவின் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பேன் இந்திய படமாக வெளியாகவுள்ளது.