Ravi Mohan An Ordinary Man
கோலிவுட் செய்திகள்

இயக்குநராக களம் இறங்கிய ரவி மோகன்... துவங்கியது `An Ordinary Man' | Yogi Babu | Ravi Mohan

நடிகராக ரவி மோகன் பிரபலம் என்றாலும், அவரது ஆசையே சினிமாவில் இயக்குநராவது தான். இதற்காக கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நடிகராக சினிமா பயணத்தை துவங்கினார். இப்போது அவர் ஆசைப்பட்டபடி இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.

Johnson

நடிகர் ரவி மோகன் இப்போது இயக்குநர் + தயாரிப்பாளர் ரவி மோகன். ஒரு பக்கம்  'ஜீனி', 'கராத்தே பாபு', 'ப்ரோ கோட்' என பட வரிசை வைத்துள்ளார் ரவி. அதே நேரம் கடந்த ஆண்டு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை துவங்கி கார்த்திக் யோகி இயக்கத்தில் அவர் நடிக்கும் 'ப்ரோ கோட்' மற்றும் ரவி இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் `An Ordinary Man' படத்தையும் அறிவித்தார்.

இதில் தற்போது ரவி மோகன் இயக்கும்  `An Ordinary Man' படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. நடிகராக ரவி மோகன் பிரபலம் என்றாலும், அவரது ஆசையே சினிமாவில் இயக்குநராவது தான். இதற்காக கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நடிகராக சினிமா பயணத்தை துவங்கினார். இப்போது அவர் ஆசைப்பட்டபடி இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.

An Ordinary Man

முதலில் கார்த்திக் யோகி இயக்கும் `ப்ரோ கோட்' முடித்துவிட்டு தான்  `An Ordinary Man' துவங்குவதாக இருந்திருக்கிறது. ஆனால் எஸ்.ஜே.சூர்யா இப்போது 'கில்லர்', 'ஜெயிலர்2' படங்களில் நடித்து வருவதால் அவருக்காக காத்திருக்கும் இடைவெளியில் தான் யோகிபாபுவின் படத்தை தொடங்கிவிட்டார் ரவி மோகன் என்கிறார்கள். இந்த படத்தில் ரவியுடன் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன், ஷ்ரத்தா ச்ரீநாத், ச்ரி கௌரிப் ப்ரியா, யோகிபாபு என பலரும் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்கு இடையே தான் யோகிபாபுவின் படத்திற்கு வந்திருக்கிறார் ரவிமோகன்.

நடிகர் ரவி மோகன்

குறுகிய கால தயாரிப்பாக உருவாகும்  `An Ordinary Man' இந்த படத்தின் ஷூட்டிங் தி.நகரில் தொடங்கியிருக்கிறது. படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடக்கிறது. தற்போது, யோகிபாபு நடித்து வருகிறார். ஹீரோயின் மற்றும் முக்கிய பாத்திரங்கள் அடுத்த ஷெட்யூலில் இணைவார்கள் என்கிறார்கள். இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு மீண்டும் 'ப்ரோ கோட்' படத்திற்கு வருகிறார் ரவி. தனது ரவிமோகன் ஸ்டூடியோஸ் மூலம் ரவி தயாரிக்கும் 'ப்ரோ கோட்' மற்றும் 'an ordinary man'இரண்டையுமே நெட்ஃபிளிக்ஸ் தான் வாங்கியிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ரவி மோகன்.