Ravi Basrur Blast
கோலிவுட் செய்திகள்

கோலிவுட்டில் அறிமுகமாகும் KGF இசையமைப்பாளர்! | Blast | Ravi Basrur

தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான  குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மையக்கரு.

Johnson

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படத்தின் தலைப்பு  'பிளாஸ்ட்' எனவும் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படமாக AGS நிறுவனம் 'பிளாஸ்ட்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. 'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு என வலுவான கூட்டணி இணைந்துள்ளது. G V Prakash

இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், "அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரித்து இருப்பதையும் அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை  இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்" என்றார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படம் விரைவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.