சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்துக்கு முதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருந்தார். ‘மூக்குத்தி அம்மன்’ வெளியான பின் இருவரும் சந்தித்து இணைந்து பணியாற்ற முடிவு செய்தாலும், ரஹ்மான் பின்னர் படத்திலிருந்து விலகினார். அது குறித்து தற்போது ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிவரும் படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து இதுவரை 1 டீசர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. படம் மே 14ம் தேதி வெளியாகவுள்ளது.
முதலில் இப்படத்திற்கு ஏ ஆ ரஹ்மான் இசையமைக்க இருந்து பின்னர் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய ஆர் ஜே பாலாஜி "மூக்குத்தி அம்மன் வெளியான பிறகு, நானும் ஏ.ஆர்.ரஹ்மான் சாரும் சந்தித்தோம். நாம் இணைந்து பணியாற்றலாமா என்று ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே கேட்டார். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன், அவரிடம் கருப்பு படத்தின் கதையை விவரித்தேன். அவர் 'சிறப்பா பண்ணாலம்' என்றார். பின்னர் ஐந்து முறை சந்தித்தோம்.
ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் காரணமாக, 'என்னால் இந்தப் படத்தை கச்சிதமாகச் செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, உங்கள் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது, நாம் இப்போது என்ன செய்யலாம்?' என்று கேட்டார். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, எங்களுக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. அதனால், சாய் அபயங்கரின் முந்தைய பணி எங்களுக்குப் பிடித்திருந்தது, அவரை ஒப்பந்தம் செய்தோம்." என்றார்.