KJR Angikaaram
கோலிவுட் செய்திகள்

ஹீரோவான தயாரிப்பாளர் KJR... வெளியான ட்ரெய்லர்! | Angikaaram

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது.

Johnson

தமிழில் `அறம்', `ஐரா', `குலேபகாவலி', `க பெ ரணசிங்கம்', `ஹீரோ', `டிக்கிலோனா', `அயலான்' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் KJR என்ற ராஜேஷ். தற்போது இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அங்கீகாரம்’. அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்த தென்பாதியான் இப்படத்தை இயக்கியுள்ளார். பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு  தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு நீதிமன்ற படியேறி போராடும் இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் நீதிமன்ற வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது, விரைவில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.