Priyanka Mohan, Park Hye Jin Made in Korea
கோலிவுட் செய்திகள்

`ஸ்க்விட் கேம்’ பாட்டியுடன், பிரியங்கா மோகன் நடித்துள்ள ’மேட் இன் கொரியா’ | Priyanka Mohan

கொரியாவைப் பற்றி செண்பாவின் கனவுகள் வியப்பும் ஆர்வமும் நிறைந்தது. இந்தக் கதையை முதலில் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது.

Johnson

பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’மேட் இன் கொரியா’. `நித்தம் ஒரு வானம்' மூலம் கவனம் ஈர்த்த ரா.கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தியா மற்றும் கொரியா இடையிலான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 12 வெளியாகவுள்ளது.

கொரிய கலாசாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா, அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். அதற்கான பயணத்தை மேற்கொள்ளும் அவளுக்கு ஏற்படும் சவால்களும், நிகழும் நெகிழ்ச்சியான தருணங்களுமே படத்தின் கதை. இதில் பிரியங்கா மோகன் உடன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள பார்க் ஹை-ஜின், `ஸ்க்விட் கேம்’ சீரிஸில் நடித்து பிரபலமானவர்.

படம் குறித்து இயக்குநர் ரா.கார்த்திக் பேசுகையில், “கொரிய மற்றும் தமிழ் கலாசாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையைச் சொல்ல தூண்டியது” என்றார். 

தனது கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறுகையில், “கொரியாவைப் பற்றி செண்பாவின் கனவுகள் வியப்பும் ஆர்வமும் நிறைந்தது. இந்தக் கதையை முதலில் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்திருப்பது இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது” என்றார்.