Prasanth Pandiyaraj  Warrant
கோலிவுட் செய்திகள்

ஹீரோவான `விலங்கு' புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்! | Warrant | Prasanth Pandiyaraj

இவர் அடுத்தாக விமல், இனியா, பாலசரவணன் நடிப்பில் இயக்கிய `விலங்கு' வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Johnson

ஜிவி பிரகாஷ், க்ரித்தி கர்பந்தா நடித்த `ப்ரூஸ் லீ' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் பாண்டியராஜ். இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இவர் அடுத்தாக விமல், இனியா, பாலசரவணன் நடிப்பில் இயக்கிய `விலங்கு' வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் பிறகு சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி நடித்த `மாமன்' படத்தை இயக்கி அதுவும் பெரிய ஹிட்டானது.

இயக்குநராக பணியாற்றி வந்த பிரசாந்த் பாண்டியராஜ் தற்போது ஹீரோவாக களம் இறங்குகிறார். `வாரண்ட்' என்ற சீரிஸில் நாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த். பாலாஜி சக்திவேல், காளிவெங்கட், அருள்தாஸ், நம்ரத்தா எனப் பலரும் இந்த தொடரில் நடித்துள்ளனர். இதன் கதை திரைக்கதையை பிரஷாந்த் உடன் இணைந்து எழுதியுள்ள விக்னேஷ் நடராஜன் இத்தொடரை இயக்கியும் உள்ளார்.

விலங்கு சீரிஸ்க்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, இந்த தொடரின் கதையும் விலங்கு சீரிஸ் நடக்கும் அதே காலகட்டத்தில் நிகழ்வது போல அமைக்கப்பட்டுள்ளது. அதனை குறிக்கும்படி From the world of Vilangu என பதிவிட்டுள்ளனர். தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் 8ம் தேதியும், சீரிஸ் 22ம் தேதியும் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.