Pradeep Ranganathan Ramesh
கோலிவுட் செய்திகள்

"உங்களது விஸ்வாசத்துக்கு எனது சிறிய பரிசு!" - தன் நண்பருக்கு சர்ப்ரைஸ் தந்த பிரதீப் | PR | Ramesh

என்னுடைய முதல் கார். என்னுடைய நண்பனிடமிருந்து... வெறும் பரிசு அல்ல, நம்பிக்கை மற்றும் நாங்கள் பகிர்ந்து கொண்ட பயணத்தின் சின்னம்.

Johnson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக `கோமாளி', நடிகராக `லவ் டுடே', `டிராகன்', `டியூட்' என தொட்டதெல்லாம் ஹிட் அடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார். இப்போது இவர் செய்த ஒரு விஷயம் வைரல் வீடியோவாக சுற்றி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய நண்பரும், Love Today, Dragon, படத்தில் Co Director-ஆகவும் Comali படத்தில் Associate Director-ஆகவும் பணியாற்றிய ரமேஷுக்கு கார் ஒன்றை  பரிசாக கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், காரை கொடுக்கும்போது, "சிறப்பான வேலை செய்து வருகிறீர்கள். உங்களது விஸ்வாசத்துக்கு எனது சிறிய அன்புப் பரிசு. இது தொடக்கம் தான். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. ரொம்பவும் நன்றி, லவ் யூ" என்று சொல்லி ஒரு முத்தமும் கொடுத்து காரை அன்பளிப்பாக கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

காரை பரிசாக பெற்ற இயக்குநர் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, அதில் "என்னுடைய முதல் கார். என்னுடைய நண்பனிடமிருந்து... வெறும் பரிசு அல்ல, நம்பிக்கை மற்றும் நாங்கள் பகிர்ந்து கொண்ட பயணத்தின் சின்னம். இந்த அழகான நினைவுக்கும், எப்போதும் என்னை நம்பியதற்கும் நன்றி. இந்த தருணம் எப்போதும் பயணத்தையும் நாங்கள் கட்டியெழுப்பிய பிணைப்பையும் எனக்கு நினைவூட்டும். இது காரை விடவும் நீடிக்கும் ஒரு நினைவு" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவின் commentல், தயாரிப்பாளர் அர்சனா கல்பாத்தி உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.