பவிஷ் நாராயண், நாக துர்கா நடிப்பில் மகேஷ் ராஜேந்திரன் இயங்கிவந்த படம் `Love Oh Love'. இதில் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்டிக் எண்டர்டெய்னரான இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது இதன் முழுபடப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. தனுஷ் இயக்கிய `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பவிஷின் இரண்டாவது படம் இது. தெலுங்கு you tube புகழ் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் (Post Production) வேகமாக நடைபெற்று வருகின்றன. Love Oh Love, 2026 கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளைஞர்களின் உறவுகளை நவீன கோணத்தில், உணர்ச்சிப் பூர்வமாகவும், மனதைத் தொடும் வகையிலும் சொல்லும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.