Rajinikanth  Padayappa
கோலிவுட் செய்திகள்

படையப்பா 2? - படையப்பா நினைவுகளை பகிர்ந்த ரஜினிகாந்த் | Padayappa | Rajini

இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதா பாத்திரத்தை மையமாக வைத்துதான் நீலாம்பரி பாத்திரம் என புரளிகள் கிளம்பியது. 96ல் அவருக்கு எதிராக நான் பேசி இருந்தேன்.

Johnson

"படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என யோசித்த போது, டக்கென `படையப்பா' என தோன்றியது. என்னுடைய நிறைய்ய படங்களுக்கு நான்தான் தலைப்பு வைத்திருக்கிறேன். ஆனால், படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார். இருந்தாலும் நான் என் பிடியிலிருந்து மாற மாட்டேன் என அவருக்கு தெரிந்ததால் சம்மதித்தார். பின்பு ஒரு முறை தயானந்த சரஸ்வதியை சந்தித்த போது இந்த தலைப்பை கூறினேன். அவர் அட ஆறுபடையப்பா போல் இருக்கிறது என்றார். பின்பு தான் முருகனின் வேல் இருப்பதை சேர்த்தோம்.

படத்தின் நடிகர்கள் பற்றி யோசிக்கும் போது, நீலாம்பரி பாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய்தான் மனதில் தோன்றினார். அவருக்காக பல மாதங்கள் காத்திருந்தோம். ஒருவேளை ஒரு வருடம் காத்தருக்க சொல்லி இருந்தால் கூட நான் காத்திருந்து இருப்பேன். ஏனென்றால் நீலாம்பரி பாத்திரம்தான் படமே. அதன் பிறகுதான் ஐஸ்வர்யா ராய்க்கு இதில் நடிக்க விருப்பம் இல்லை என தெரிந்தது. அதன் பின் அவரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் ரவிக்குமார்தான் ரம்யா கிருஷ்ணன் பெயரை சொன்னார். எனக்கு அரைமனதாக இருந்தது. ஆனால் நேரில் அவர் கண்ணில் இருக்கும் பவரை பார்த்த பின் முடிவு செய்துவிட்டேன்" - வீடியோவில் ரஜினிகாந்த்

பொன்னியின் செல்வன் நந்தினி போல் ஒரு பாத்திரம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `படையப்பா'. தற்போது அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு படையப்பா படம் குறித்து பல சுவாரஸ்யமான நினைவுகளை பற்றி பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Padayappa

அந்த வீடியோவில் பேசும் போது "படையப்பா என் சினிமா வாழ்க்கையின் 25வது வருடத்தில் நடித்த படம். அதற்குசில வருடங்கள் முன்பே என்னுடைய 25 வருடத்தின் போது சொந்த படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். என் நண்பர்களின் பெயரை போட்டு, நானேதான் அந்த படத்தை தயாரித்தேன். படத்தின் மூலக்கதையும் என்னுடையதுதான். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலும் அதில் உள்ள நந்தினி பாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தது. நந்தினி மாதிரி ஒரு பாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என நினைத்து சில வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்த கதைதான் படையப்பா. அதனை கே எஸ் ரவிக்குமாரிடம் கூறினேன், அவருக்கும் மிகவும் பிடித்தது. அவரே அருமையாக திரைக்கதை, வசனம் எழுதினார்.

படையப்பா

படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என யோசித்த போது, டக்கென `படையப்பா' என தோன்றியது. என்னுடைய நிறைய்ய படங்களுக்கு நான் தான் தலைப்பு வைத்திருக்கிறேன். ஆனால் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார். இருந்தாலும் நான் என் பிடியிலிருந்து மாற மாட்டேன் என அவருக்கு தெரிந்ததால் சம்மதித்தார். பின்பு ஒரு முறை தயானந்த சரஸ்வதியை சந்தித்த போது இந்த தலைப்பை கூறினேன், அவர் அட ஆறுபடையப்பா போல் இருக்கிறது என்றார். பின்பு தான் முருகனின் வேல் இருப்பதை சேர்த்தோம்.

Aishwarya Rai

படத்தின் நடிகர்கள் பற்றி யோசிக்கும் போது, நீலாம்பரி பாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் தான் மனதில் தோன்றினார். அவருக்காக பல மாதங்கள் காத்திருந்தோம். ஒருவேளை ஒரு வருடம் காத்தருக்க சொல்லி இருந்தால் கூட நான் காத்திருந்து இருப்பேன். ஏனென்றால் நீலாம்பரி பாத்திரம் தான் படமே. அதன் பிறகு தான் ஐஸ்வர்யா ராய்க்கு இதில் நடிக்க விருப்பம் இல்லை என தெரிந்தது. அதன் பின் அவரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் ரவிக்குமார் தான் ரம்யா கிருஷ்ணன் பெயரை சொன்னார். எனக்கு அரைமனதாக இருந்தது. ஆனால் நேரில் அவர் கண்ணில் இருக்கும் பவரை பார்த்த பின் முடிவு செய்துவிட்டேன்.

படையப்பாவிற்குள் சிவாஜி

பின்பு தந்தை பாத்திரத்திற்கு சிவாஜி கணேஷன் பெயரை சொன்னேன். ரவிக்குமார் மீண்டும் தயங்கினார். நீங்கள் கதையை சொல்லுங்கள் என்றேன், சிவாஜி சார் சம்மதித்தார். ஆனாலும் அவர் பெரிய சம்பளத்தை கேட்கிறார், 5, 6 நாட்களுக்கு இவ்வளோவா என ரவி தயங்கினார். நாம் தான் அவரிடம் சென்று கேட்டோம், இப்போது சம்பளத்திற்காக அவரை வேண்டாம் என்றால், நம்மை விட கேவலம் யாருமே இருக்கமாட்டார்கள் என்றேன். அடுத்த நாளே அவரிடம் சென்று ஒரே பேமன்ட்டாக சம்பளத்தை கொடுத்து ஆசி வாங்கினோம். அந்த வயதிலும் சிவாஜி சார் ஷூட்டில் யாரும் தன்னை முந்தி விடுவார்களோ என தீவிரமாக உழைப்பார்.

Shivaji

உணவு இடைவேளையின் போது என்னை அழைத்த சிவாஜி சார் "டேய் நான் பிரபுவிடமும், ராமிடமும் உன்னைப்பற்றி பேசுவேன். இவன் ஏன் சம்பாதிக்கும் காலத்தில் இமைய மலை, வருடத்திற்கு ஒரு படம் என சுற்றுகிறான் என சொல்வேன். ஆனால் நீ செய்தது தான் சரி. இப்போது எனக்கு படப்பிடிப்பு இல்லை என்றால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடைத்த வைத்தது போல் ஆகிவிட்டது. நீ நேரத்தை எப்படி செலவிடுவது என கற்றுக் கொண்டாய்" என்றார். அது எனக்கு பெரிய பாராட்டு. பிறகு "நான் செத்த பிறகு சுடுகாடு வரை என்னோடு வருவாயா?" எனக் கேட்டார். நான் அதிர்ந்து போனேன், "வருவேன் என சொன்னேன்". எந்த இறுதி ஊர்வலத்தில் உடலுடன் போனது கிடையாது. அவர் உடலுடன் நான் சென்றேன். இதில் பணியாற்றிய பலர் இப்போது இல்லை. அவர்களுக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்.

படையப்பா 2

இப்போது 2.0, ஜெயிலர் 2 எல்லாம் நடந்தது. அப்போது படையப்பா 2 ஏன் செய்யக்கூடாது என தோன்றியது. அதற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தலைப்பு `நீலாம்பரி'. அது நன்றாக வந்தது என்றால் படையப்பா போல இன்னொரு படம் நீலாம்பரி. அது வந்தால் ரசிகர்களுக்கு திருவிழா போல இருக்கும். 25 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் வருகிறது. இந்தப் படம் தியேட்டரில் கண்டு கழிக்க வேண்டியது. அதனால் தான் ஓடிடிக்கு கொடுக்கவில்லை. டிவியில் கூட சில முறை மட்டுமே ஒளிபரப்பும் முறையில் கொடுத்தேன். என் பிறந்தநாளன்று படையப்பாவை பார்த்து மகிழுங்கள்" என்றார்.