அஜித் தனது ரேசிங் மற்றும் சினிமா பயணத்தை சமநிலைப்படுத்தி வருகிறார். சிறுத்தை சிவா, அஜித்துடன் பணியாற்றும் அனுபவத்தைப் பற்றி பேசினார். அஜித் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது புதிய அனுபவமாக இருந்தது என அவர் கூறினார். அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் எனவும், ஜானர் ரகசியமாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
நடிகர் அஜித் தனது ரேஸ் பந்தயங்களில் கவனமாக பணியாற்றி வருகிறார். சினிமாவில் `குட் பேட் அக்லி' படத்துக்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் அஜித். ரேஸ், சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் தொடர்ச்சியாக தனது குட் புக்கில் உள்ள இயக்குநர்களுடன் நட்பில் இருக்கிறார். அப்படித்தான் இயக்குநர் `சிறுத்தை' சிவா உடன் அஜித் நட்பும். `வீரம்', `வேதாளம்', `விவேகம்', `விஸ்வாசம்' என நான்கு படங்களை அவருக்கு கொடுத்தார் அஜித்.
இப்போது ரேஸ் தொடர்பான ஆவணப்படத்தில் சிறுத்தை சிவா பணியாற்றி வருகிறார். அது பற்றி சமீபத்திய விருது விழாவில் பேசி இருக்கிறார் சிவா. அப்போது, "அஜித் சார் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. டோட்டலாக அது வேறோர் உலகமாக இருக்கிறது. அங்கே நிறைய சவால்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட ஒரு மிகப்பெரிய பேஷன் (Passion) அந்த வேலையின் பின்னால் இருக்கிறது. அஜித் சார் அதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறார்." என்றார்.
பின்னர் அஜித்துடன் எப்போது அடுத்த படம் என கேட்கப்பட "`அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?’ என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும். அந்தப் படம் எந்த ஜானராக (Genre) இருக்கும் என்பதைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்கிறோம். அஜித் சார் தனது பேஷனை (ரேஸிங் மற்றும் சினிமா) மிகவும் அழகாக பேலன்ஸ் செய்கிறார். அதேபோல் விஜய் சாரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இருவருமே மிகவும் இன்ஸ்பிரேஷனலான மனிதர்கள்" எனக் கூறியுள்ளார்.