Naseeruddin Shah OM
கோலிவுட் செய்திகள்

26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழில் நஸீருதீன் ஷா! | Naseeruddin Shah | OM | Dhanush

கமல்ஹாசன் இயக்கி நடித்து 2000ஆம் ஆண்டு வெளியான படம் 'ஹே ராம்'. இதில் காந்தி வேடத்தில் நடித்திருந்தது நஸீருதீன் ஷாதான்.

Johnson

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படம் ' ஓம்: சாப்டர் 1'. இப்படத்தில், மம்மூட்டி, ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் ஏற்கெனவே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் நஸீருதீன் ஷா இணைந்துள்ளதை அறிவித்துள்ளது படக்குழு. இந்த முன்னணி நட்சத்திரத்தின் வருகையால், 'ஓம்' படத்தின் நட்சத்திரப் பட்டியல் மேலும் பெரிதாகியுள்ளது. இதற்கு முன்பு நஸீருதீன் ஷா ஒரே ஒரு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். அது கமல்ஹாசன் இயக்கி நடித்து 2000ஆம் ஆண்டு வெளியான 'ஹே ராம்'. இதில் காந்தி வேடத்தில் நடித்திருந்தது நஸீருதீன் ஷாதான். அதன் பிறகு 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் நஸீருதீன் ஷா.

மேலும் நசிருதீன் தனது ஒரே மலையாளப் படமான, 'பொந்தன் மடா'வில் மம்மூட்டியுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இருவரும் தங்களது முதல் கூட்டணிக்குப் பின் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஓம்' படத்தில் மீண்டும் இணைய உள்ளனர்.

Naseeruddin Shah

சமீபத்தில் நஸீருதீன் முக்கிய வேடத்தில் நடித்து இம்தியாஸ் அலி இயக்கி வெளியான 'மெயின் வாபஸ் ஆவுங்கா' படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 'ஓம்' திரைப்படம் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.