\
Villupattu Madhavi debut in cinema as singer
Villupattu MadhaviVetta Sami

சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி! | Villupattu Madhavi

தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி.
Published on

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி. நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருபவர்.

தன்னுடைய தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வில்லுப்பாட்டு மாதவி, தற்போது அருள்நிதி - அமீர் நடித்துள்ள 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையில் அவர் பாடிய 'சுடலைமாடன் வேட்டைப்பாடல்' பாடல், சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. வீரமும் தெய்வ நம்பிக்கையும் மண்ணின் அடையாளம் என்ற கதைக்கருவுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை, 'பம்பர்' திரைப்படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 'வேட்ட சாமி' திரைப்படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடியுள்ள தகவலை, மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார், இசையமைப்பாளர் ஜிப்ரான்.

Villupattu Madhavi debut in cinema as singer
சவுரவ் கங்குலி பயோபிக் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | Sourav Ganguly | Rajkummar Rao
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com