M R Bharathi Cycle Gap
கோலிவுட் செய்திகள்

முக்கோண காதல் கதை + ம்யூசிகல் படமாக வரும் 'சைக்கிள் கேப்' | Cycle Gap | M.R. Bharathi

'அழியாத கோலங்கள் 2' திரைப்படம் அதன் முதிர்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான கதையையும், 'ட்ரீம் கேர்ள்' படத்தில் கனவுகளை பற்றியும் பேசினார்.

Johnson

'அழியாத கோலங்கள் 2',  'ட்ரீம் கேர்ள்' படங்களை இயக்கியவர் எம் ஆர் பாரதி. தற்போது இவர் நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் இயக்கியுள்ள படம் 'சைக்கிள் கேப்'. மியூசிக்கல் + முக்கோண காதல் கதை உள்ள படமாக இது உருவாகியுள்ளது.

'அழியாத கோலங்கள் 2' திரைப்படம் அதன் முதிர்ச்சியான  மற்றும் உணர்வுப்பூர்வமான கதையையும், 'ட்ரீம் கேர்ள்' படத்தில் கனவுகளை பற்றியும் பேசினார். தற்போது 'சைக்கிள் கேப்' இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார் என சொல்கிறது படக்குழு.

Cycle Gap

படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.