Mirna Menon Jailer 2
கோலிவுட் செய்திகள்

"ஜெயிலர் 2 இடைவேளை காட்சி.." - மிர்ணா மேனன் சொன்ன தகவல் | Jailer 2 | Mirna Menon

25 வருடங்களுக்கு முன்பு, என்னுடைய சிறு வயதில், `படையப்பா' படத்தை பார்த்தபோது அதில் ஒரு வசனம் வந்தது. `வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் போகல'. படப்பிடிப்பில் ரஜினி சாரை முதன்முதலில் பார்த்தபோது என் மனதில் அதுதான் தோன்றியது.

Johnson

`பட்டதாரி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மிர்ணா மேனன். பின்னர் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்தவர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய `ஜெயிலர்' படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். இப்போது உருவாகி வரும் `ஜெயிலர் 2' படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டபோது, ’ஜெயிலர் 2’ எப்படி உருவாகி வருகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

மிர்ணா அதற்குப் பதிலளித்தபோது, " ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகம் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய வேறொரு படம் வெளியாவதாக இருந்தது. அதற்கான பேட்டிகள் அளித்தபோது ’ஜெயிலர்’ எப்படி வந்திருக்கிறது எனக் கேட்டார்கள். இப்போதுதான் படத்தின் இடைவேளை காட்சி படமாக்கி முடித்தோம். தமிழ் சினிமாவில் இதுபோன்ற இடைவேளை இதுவரை வந்ததில்லை, இனியும் வருமா தெரியவில்லை எனக் கூறினேன். ஆனால் ’ஜெயிலர் 2’ பற்றி சொல்ல வேண்டும் என்றால், அந்த இடைவேளையே அப்படி என்றால், ’ஜெயிலர் 2’ எப்படி இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள். நான் அந்தக் காட்சியில் இருக்கிறேனா என்பது குறித்து சொல்ல முடியாது. அதை எல்லாம் நீங்கள் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும்.

Jailer 2

25 வருடங்களுக்கு முன்பு, என்னுடைய சிறு வயதில், ’படையப்பா’ படத்தைப் பார்த்தபோது அதில் ஒரு வசனம் வந்தது. `வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் போகல'. படப்பிடிப்பில் ரஜினி சாரை முதன்முதலில் பார்த்தபோது என் மனதில் அதுதான் தோன்றியது. அதே எனர்ஜி, அதே ஸ்டைல் அதைத் தாண்டி அவர் மிக அருமையான மனிதர்.

Mirna Menon

மூன்றரை ஆண்டுகளாக அவருடன் பணியாற்றி வருகிறேன். அவரிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடியும். எனக்குத் தெரிந்து அவருடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்த இளம் நடிகை நான்தான்" என்றார்.