Parimala and Co, Dhurandhar The Revenge This Week's Release
கோலிவுட் செய்திகள்

ராம் சரணின் `Peddi' to அனுராக் காஷ்யப்பின் `Bandar'... இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் பாண்டிராஜ் இயக்கியுள்ள `பரிமளா & கோ', ஓடிடியில் மாதுரி தீக்‌ஷித் நடித்துள்ள `Maa Behen' படம்  உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Brown (Hindi) Zee5 - June 5

Brown

க்ரீஷ்மா கபூர் நடித்துள்ள சீரிஸ் `Brown'. சீரியல் கில்லரை துரத்தும் ஒரு போலீஸின் கதை.

OTT: Maa Behen (Hindi) Netflix - June 4

Maa Behen

மாதுரி தீக்‌ஷித், த்ரிப்தி திம்ரி நடித்துள்ள படம்`Maa Behen'. அம்மாவும் அவரது இரு மகள்களும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதே கதை.

Office Romance (English) Netflix - June 5

Office Romance

Jennifer Lopez நடித்துள்ள படம் `Office Romance'. அலுவலகத்தின் CEO ஜாக்கி க்ரூஸ், புதிய நபர் ஒருவரைச் சந்தித்தபின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Post Theatrical Digital Streaming: Neelira (Tamil) Prime - June 2

Neelira

சோமீதரன் இயக்கிய படம் `நீளிரா'. இலங்கையில் ஒரு திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களே கதை.

Carmeni Selvam (Tamil) Prime - June 3

Carmeni Selvam

சமுத்திரக்கனி நடித்த படம் `கார்மேனி செல்வம்'. பணக்காரராக ஆசைப்படும் ஒரு கார் ஓட்டுநரின் கதை.

Hoppers (English) Jio Hotstar - June 3

Hoppers

Daniel Chong இயக்கிய படம் `Hoppers'. மிருகங்கள் மீது பிரியம் கொண்ட ஆராய்ச்சியாளர் ஒருவர் செய்யும் ஒரு தவறால் நிகழும் பிரச்னைகளே கதை. 

29 (Tamil) Netflix - June 4

29

ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி நடித்த படம் `29'. தன்னுடைய சுகத்தைத் தேடி அலையும் ஓர் இளைஞனின் கதை.

Dhurandhar: The Revenge (Hindi) Jio Hotstar- June 4

Dhurandhar: The Revenge

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த படம் `Dhurandhar: The Revenge'. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தீவிரவாத கும்பலை அழிக்க ஹம்சா எடுக்கும் முயற்சிகளே கதை.

Patriot (Malayalam) Zee5 - June 5

Patriot

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி, மோகன் லால் இணைந்து நடித்த படம் `Patriot'. AI மூலம் மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் முதலாளிகளின் சதியை முறியடிக்கும் ஹீரோவின் கதை.

KD – The Devil (Kannada) Zee5 - June 5

KD The Devil

பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள படம் `KD The Devil'. அண்டர்வேர்ல்ட் டான்களுக்கு இடையேயான மோதலே படம்.

Theatre: Peddi (Telugu) - June 4

Peddi

ராம் சரண் நடித்த படம் `பெத்தி'. தன் ஊர் மக்களின் வாழ்க்கை மாற ஹீரோ எடுக்கும் முயற்சிகளே கதை.

Parimala and Co (Tamil) - June 5

Parimala and Co

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்த படம் `பரிமளா & கோ'. கொலைப்பழியில் இருந்து தப்ப ஒரு குடும்பம் எடுக்கும் முயற்சிகளே கதை.

Sannidhanam P O (Tamil) - June 5

Sannidhanam P O

யோகி பாபு நடித்துள்ள படம் `சன்னிதானம் P O'. சிறு வயதில் தொலைந்துபோன தன் மகனைத் தேடும் தாயின் பயணமே கதை.

Mollywood Times (Malayalam) - June 5

Mollywood Times

அபிநவ் இயக்கத்தில் நஸ்லென் நடித்துள்ள படம் `Mollywood Times'. சினிமா இயக்குநர் ஆக முயலும் இளைஞனின் கதை.

Bandar (Hindi) - June 5

Bandar

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் பாபி தியோல் நடித்துள்ள படம் `Bandar'. டிவி நடிகர் ஒருவர் சிக்கிக்கொள்ளும் ஒரு வழக்கும் அதன் விளைவுகளுமே கதை.

Hai Jawani Toh Ishq Hona Hai (Hindi) - June 5

Hai Jawani Toh Ishq Hona Hai

வருண் தவான், பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடித்துள்ள படம் `Hai Jawani Toh Ishq Hona Hai'. முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ளது.

Scary Movie (English) - June 5

Scary Movie

Michael Tiddes இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Scary Movie'. இது இந்த பட வரிசையில் ஆறாவது பாகமாக வெளியாகிறது. நண்பர்கள் கூடும்பொழுதில் சீரியல் கில்லர் திரும்ப வந்த பின்னர் என்ன ஆனது என்பதே கதை.

He-Man and The Masters of The Universe (English) - June 5

He-Man and The Masters of The Universe

Travis Knight இயக்கியுள்ள படம் `Masters of the Universe'. கார்ட்டூனாக வந்த ஹீமேனின் திரைப்பட வடிவே இது.