\
Parimala and Co Review
Jayaram, UrvashiParimala and Co Review

`பரிமளா & கோ'வின் காமெடி மிஷன் சக்சஸா? | Parimala and Co Review | Jayaram | Urvashi

தன்னுடைய வழக்கமான காமெடி பாணியில், ஒரு whodunit த்ரில்லர் சேர்த்து கொடுக்க முயன்றிருக்கிறார் பாண்டிராஜ்.
Published on
பரிமளா & கோவின் காமெடி மிஷன் சக்ஸசா?(2 / 5)

ஒரு கொலையால், குடும்பம் ஒன்று சந்திக்கும் சிக்கல்களே கதை!

பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) தம்பதி தங்களின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) உடன் அமைதியாக சிக்கனமாக வாழ்ந்து வருகிறார்கள். அதே ஏரியாவைச் சேர்ந்த ரவுடி மற்றும் போதைப்பொருள் விற்கும் வர்கீஸ் (சாண்டி) மதுமிதாவைக் காதலிப்பதாகச் சொல்லி தொல்லை செய்கிறார். பரிமளா குடும்பத்து நபர்களையும் சீண்டுகிறார்.

Jayaram
JayaramParimala and Co

இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வர்கீஸை கொன்றுவிடலாமா என முடிவு செய்கிறது பரிமளா & கோ. மறுநாள் காலை வர்கீஸ் மர்மமான முறையில் கொலையாகி இறந்துகிடக்கிறார். இந்தக் கொலையைச் செய்ய பரிமளா குடும்பத்துக்கு காரணம் இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமில்லாது இன்னும் யாருக்கெல்லாம் வர்கீஸ் சாகவேண்டியது அவசியமாக இருந்தது? உண்மையில், அவனை கொன்றது யார்? என்பதெல்லாம்தான் மீதிக்கதை.

Parimala and Co Review
"விஜய் சார் வெற்றி பெறுவார் என்பது.." - லிங்குசாமி | Lingusamy | CM Vijay

தன்னுடைய வழக்கமான காமெடி பாணியில், ஒரு whodunit த்ரில்லர் சேர்த்து கொடுக்க முயன்றிருக்கிறார் பாண்டிராஜ்.

பரிமளா ரோலில் அட்டகாசமாகப் பொருந்துகிறார் ஜெயராம். கஞ்சத்தனமாக குடும்பம் நடத்துவது, கொலையை யார் செய்திருப்பார் என சந்தேகிப்பது, மனைவி கொடுக்கும் குடைச்சல்களுக்கு எரிச்சல் ஆவது எனப் பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஊர்வசி வழக்கம்போல தன் காமெடி மாடுலேஷன்கள் மூலம் காமடிக்கு வலு சேர்க்கிறார். சில இடங்களில் அதுவே கொஞ்சம் ஓவர் டோஸும் ஆகிறது. மூத்த மகள் பராசக்தியாக வரும் சஞ்சனாவுக்குக் கிட்டத்தட்ட `லப்பர் பந்து' படத்தின் அதே ரோல்தான்.

Parimala and Co
Parimala and Co

கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்கிறார். அனந்திதா நடிக்க முயல்கிறார். ஆனால், இன்னும் பயிற்சி வேண்டும் என்ற வகையில்தான் இருக்கிறது அவரது நடிப்பு. வீட்டு ஓனராக வரும் யோகிபாபுவின் ஒன்லைனர்கள் சில சிரிக்க வைக்கிறது, பல சோதிக்கிறது. காவலராக வரும் மிஷ்கின் காட்சிகள் சுவாரசியம் சேர்கின்றன. மிக அசட்டையாக இந்த வழக்கை விசாரிப்பதும், சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் மேனரிஸமும் சிறப்பு. வில்லன் வேடத்தில் வரும் சாண்டி காமெடி கலந்து வில்லத்தனம் காட்ட முயல்கிறார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு படத்தைத் தரமாகக் கொடுக்க உழைத்திருக்கிறது. வீட்டுக்குள்ளேயே வைத்து அதிகப்படியான காட்சிகள் இருந்தாலும், அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். Foxn இசையில் பின்னணி இசையும் அவ்வளவு ஈர்க்கவில்லை. வாச்சா வுடாத பாடல் மட்டும் துள்ளலாக இருக்கிறது.

Jayaram
Jayaram

கொலை, போதை, பெண் மீதான தாக்குதல் என சீரியஸ் விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதை காமெடியாக கொடுக்க முயன்றது ஓகே. ஆனால், அதில் காமெடி மிகக்குறைவான இடங்களிலேயே ஒர்க் ஆகிறது. சீரியஸான விஷயங்களையும் காமெடி செய்வதால் அதை நம்மால் எப்படி எடுத்துக் கொள்வது என குழப்பம் வருகிறது. whodunit த்ரில்லர் படம் என்பதால், பல பாத்திரங்களுக்குக் கொலைக்கான நோக்கங்கள் காட்டப்படுகிறது. ஆனால், அது எதுவுமே கதையை நகர்த்தவில்லை. படம் முடியும் வரைக்குமேகூட சில கேள்விகளுக்கு பதிலே இல்லை. பார்வையாளர்களின் கவனத்தைத் திசை திருப்பும் கிம்மிக்காக மட்டுமே சில காட்சிகள் இருக்கின்றன. மேலும், பல காட்சிகளில் நெல்சன் திலீப்குமாரின் டைப் டார்க் ஹூமர் தாக்கம் ஹெவியாக இருக்கிறது. அவை காமெடியாகவும் இல்லை என்பதுதான் சோகம். மொத்தத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை யோசிக்க காட்டிய ஆர்வத்தை கதை, திரைக்கதை எழுதுவதில் காட்டி இருந்தால் இந்த பரிமளா & கோவின் டார்க் ஹூமர் மிஷன் சக்சஸாக முடிந்திருக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com