Richard Madden, Priyanka Chopra நடிப்பில் வெளியான `Citadel' சீரிஸின் இரண்டாவது சீசன் Joe Russo இயக்கத்தில் வெளியாகிறது. இம்முறை தனக்கு வரும் ஆபத்துகளில் இருந்து மகளுடன் எப்படி நாடியா தப்புகிறார் என்பதே கதை.
Michael Greene இயக்கியுள்ள படம் `Clika'. சாதிக்க துடிக்கும் ஓர் இசைக்கலைஞனின் பயணமே கதை.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் `LIK'. 2040இல் உலகமே மிஷின் சொல்லும் ஜோடிகளை காதல் செய்யும்போது, சுயமாக ஒரு பெண் மீது காதல் கொள்ளும் இளைஞனுக்கு என்ன சிக்கல் வருகிறது என்பதே கதை.
அதிவி ஷேஷ், மிருணாள் தாக்கூர் நடித்த படம் `Dacoit'. தனக்கு துரோகம் செய்த முன்னாள் காதலியை பழிவாங்க கிளம்பும் காதலனின் கதை.
சவின் இயக்கத்தில் வெளியான படம் Vaazha II. முதல் பாகத்தில் இளைஞர்கள் வாழ்க்கையை சொன்னதுபோல, இந்தப் பாகத்திலும் சில பள்ளி மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசியது படம்.
கிருஷ்ணதாஸ் முரளி இயக்கிய படம் `Bharathanatyam 2 Mohiniyattam'. முந்தைய பாகமான `பரதநாட்டியம்' படத்தில் இறந்துபோன பரதனுக்கு இன்னொரு குடும்பம் உள்ளது என தெரிந்துகொள்ளும் பரதனின் மூத்த மனைவியும் மகனும், இந்தப் பாகத்தில் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.
ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள படம் `29'. தான் யார் என்பதைத் தேடும் ஊர் இளைஞனின் வாழ்வில் நடப்பையே கதை.
லாவண்யா திரிபாதி, தேவ் மோகன் நடித்துள்ள படம் `Sathi Leelavathi'. காதல் ஜோடிக்குள் வரும் சிக்கலே கதை.
சுமந்த் பிரபாஸ் நடித்துள்ள படம் `Godari Gattupaina'. ஆட்டோ ஓட்டும் ஹீரோ, காலேஜ் மாணவி ஹீரோயின். இவர்கள் காதலைச் சோதிக்கும் ஹீரோயினின் தந்தையை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதே கதை.
ரவிபாபு இயக்கி நடித்துள்ள படம் `Razor'. ஒரு குழந்தையைக் கொல்லத் துரத்தும் வில்லன் கும்பலை எதிர்க்கும் நாயகனின் கதை.
ஷேன் நிகம் நடித்துள்ள படம் `Dridam'. மலைப்பிரதேசம் ஒன்றில் பொறுப்பேற்கும் இளம் காவலதிகாரி எதிர்கொள்ளும் சவால்களே கதை.
ஆஷிஷ் மனோகர் இயக்கத்தில் நீத்து சிங், கபில் ஷர்மா, சாதியா கதீப் நடித்துள்ள படம் `Daadi Ki Shaadi'. பாட்டி ஒருவரின் திருமண ஏற்பாடுகள் அக்குடும்பத்தின் நபர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை காமெடியாக சொல்லும் படம்.
Karl Urban நடித்துள்ள படம் `Mortal Kombat II'. காம்பேட் சண்டைகளில் சக்திவாய்ந்த போட்டியாளர்கள் மோதிக் கொள்வதும் யார் வெற்றியாளர் என்பதுமே கதை.
Hugh Jackman நடிப்பில் Kyle Balda இயக்கியுள்ள படம், `The Sheep Detectives'. ஆடு மேய்ப்பர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, கொலையாளி யார் என்பதை ஆராயத் துவங்குகின்ற அவர் கண்காணிப்பில் இருந்த ஆடுகள் பற்றிய கதை.