Drishyam 3, Dhurandhar This Week's Release
கோலிவுட் செய்திகள்

மோகன்லாலின் `Drishyam 3' to ஓடிடியில் `Dhurandhar 2' ரிலீஸ்... இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் மோகன்லால் நடித்துள்ள `Drishyam 3', ஓடிடியில் `விலங்கு' இயக்குநர் பிரசாந்த் நடித்துள்ள `Warrent' சீரிஸ் உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Warrent (Tamil) Zee5 - May 22

Warrent 

பிரஷாந்த் பாண்டியராஜ் நடிப்பில் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ள சீரிஸ் `Warrant'. தன்னை நிரூபிக்க போராடும் காவலதிகாரியின் கதை.

OTT: Jack Ryan Ghost War (English) Prime - May 20

Jack Ryan Ghost War

Andrew Bernstein இயக்கத்தில் John Krasinski நடித்துள்ள படம் `Jack Ryan: Ghost War'. Jack Ryan சீரிஸின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள படம் இது. ஜேக் ரியன் செய்யும் சாகச பயணமே கதை.

System (Hindi) Prime - May 22

System

ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் `System'. நீதிதுறையில் நீதி கேட்டு போராடுவதே கதை.

Ladies First (English) Netflix - May 22

Ladies First

Rosamund Pike நடித்துள்ள படம் `Ladies First'. ஆணாதிக்க சிந்தனையுள்ள ஒரு நபர், பெண் அதிகாரத்தில் இயங்கும் பேரலல் உலகத்துக்கு அனுப்பப்படுகிறார். அங்கு நடப்பவை என்ன என்பதே கதை.

Post Theatrical Digital Streaming: Thimmarajupalli TV (Telugu) Aha - May 17

Thimmarajupalli TV

முனிராஜூ இயக்கிய படம் `Thimmarajupalli TV'. கிராமத்துக்கு பொதுவான தொலைக்காட்சி தொலைந்த பின்னர் நடக்கும் கலாட்டாக்களே கதை.

Sathi Leelavathi (Telugu) Jio Hotstar - May 20

Sathi Leelavathi

லாவண்யா திரிபாதி, தேவ் மோகன் நடித்த படம் `Sathi Leelavathi'. காதல் ஜோடிக்குள் வரும் சிக்கலே கதை.

Bhishmar (Malayalam) Sun NXT - May 22

Bhishmar

தியான் ஸ்ரீனிவாசன் நடித்த படம் `Bhishmar'. இரண்டு மனிதர்கள் சம்பந்தப்பட்ட கலாட்டாக்களே கதை.

Madhuvidhu (Malayalam) Sony LIV - May 22

Madhuvidhu

ஷராஃபுதீன் நடித்த படம் `Madhuvidhu'. ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் வீட்டில் வசிக்கும் மணமகன் அமிர்தராஜின் திருமணத்துக்கு ஏற்படும் தடைகளே கதை.

Shesha 2016 (Kannada) Sun NXT - May 22

Shesha 2016

பிரதீப் இயக்கியுள்ள படம் `Shesha 2016'. காவல்துறை சம்பத்தப்பட்ட த்ரில்லராக உருவாகியுள்ளது.

Dhurandhar Raw & Undekha (Hindi) Netflix - May 22

Dhurandhar 2

ரன்வீர் சிங் நடித்த படம் `Dhurandhar 2'. பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய உளவாளியின் மீது மிஷன் என்ன ஆனது என்பதே கதை.

Theatre: Drishyam 3 (Malayalam) - May 21

Drishyam 3

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள படம் `Drishyam 3'. ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தை மீண்டும் துரத்தும் பிரச்னையும், அவர்களை காக்க நடக்கும் போராட்டமும் தான் கதை.

Ugly Story (Telugu) - May 22

Ugly Story

நந்து, அவிகா கோர் நடித்துள்ள படம் `Ugly Story'. பெண்கள் மீது தவறான பார்வை கொண்டுள்ள ஒரு நபரை பற்றிய கதை.

Purushaha (Telugu) - May 22

Purushaha

வீரு இயக்கியுள்ள படம் `Purushaha'. மூன்று கணவர்களை சம்பந்தப்படுத்திய கதை.

Dose (Malayalam) - May 22

Dose

சைஜு வில்சன் நடித்துள்ள படம் `Dose'. மருத்துவமனையில் நடக்கும் மர்மமான மரணம் ஒன்றும், அதன் விளைவுகளுமே கதை.

Chand Mera Dil (Hindi) - May 22

Chand Mera Dil

லக்ஷ்யா, அனன்யா பாண்டே நடித்துள்ள படம் `Chand Mera Dil'. கல்லூரி நண்பர்கள் தங்களை பற்றி உணர்ந்து கொள்ளும் கதை.