Dhurandhar 2, Youth pt
கோலிவுட் செய்திகள்

ரன்வீரின் `Dhurandhar 2' to `Peaky Blinders: The Immortal Man'... இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் தியேட்டரில் ரன்வீர் சிங்கின் `Dhurandhar 2', ஓடிடியில் Cillian Murphyன் `Peaky Blinders: The Immortal Man' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: The Madison (English) Jio Hotstar- Mar 16

The Madison

Christina Alexandra Voros இயக்கியுள்ள சீரிஸ் `The Madison'. பெரிய இழப்புக்கு பிறகு ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றிய கதை.

Imperfect Women (English) Apple TV+ - Mar 18

Imperfect Women

Elisabeth Moss, Kerry Washington , Joel Kinnaman நடித்துள்ள சீரிஸ் `Imperfect Women'. கொலை செய்யப்படும் ஒரு பெண் பற்றிய மர்மங்கள் வெளியாவது பற்றிய கதை.

Jazz City (Hindi) SonyLIV - Mar 19

Jazz City

1971ல் கல்கதாவில் உள்ள ஒரு ஜாஸ் கிளப்பில் நடக்கும் விஷயங்களே கதை. Jubilee என்ற அட்டகாசமான சீரிஸ் தந்த சௌமிக் சென் இதனை இயக்கியுள்ளார்.

Kasargod Embassy (Malayalam) Zee5 - Mar 20

Kasargod Embassy

அதிஷ் நாயர் இயக்கியுள்ள சீரிஸ் `Kasargod Embassy'. அஸி, செம்மு இருவரின் க்ரைம் சம்பவங்களே கதை.

Chiraiya (Hindi) Jio Hotstar - Mar 20

Chiraiya

Divya Dutta நடித்துள்ள சீரிஸ் `Chiraiya'. காமலீஷ் தன்னை பற்றிய உண்மையை தன குடும்பத்திடம் சொல்ல வேண்டிய சூழல் உருவான பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Deadloch Season 2 (English) Prime - Mar 20

Deadloch

Kate Box, Madeleine Sami, Alicia Gardiner நடித்துள்ள சீரிஸ் `Deadloch Season 2'. Dulcie Collins மற்றும் Eddie Redcliffe குற்றவாளிகளை பிடிக்க நடத்தும் போராட்டங்களே கதை.

OTT: Peaky Blinders The Immortal Man (English) Netflix - Mar 20

Peaky Blinders

Tom Harper இயக்கத்தில் Cillian Murphy நடித்துள்ள படம் `Peaky Blinders: The Immortal Man'. Peaky Blinders சீரிஸின் இறுதி பகுதியாக உருவாகியுள்ளது இப்படம்.

Post Theatrical Digital Streaming: Seetha Payanam (Telugu) Sun NXT - Mar 19

Seetha Payanam

அர்ஜூன் இயக்கிய படம் `சீதா பயணம்'. தன்னை விபத்திலிருந்து காப்பாற்றிய நபரை சந்திக்க செல்லும் ஒரு பெண்ணின் பயணம்.

Landlord (Kannada) Zee5 - Mar 19

Landlord

விஜயகுமார், ரச்சிதா ராம் நடித்த படம் `Landlord'. ஒரு கிராமத்தையே கட்டுக்குள் வைத்திருக்கும் பண்ணையாரை எதிர்க்கும் பெண் கான்ஸ்டபிள் பற்றிய கதை.

The Housemaid (English) Prime - Mar 19

The Housemaid

Sydney Sweeney, Amanda Seyfried, Brandon Sklenar நடித்த படம் `The Housemaid'. புதிதாக ஒரு வீட்டுக்கு பணிக்கு செல்லும் ஒரு பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களே கதை.

Valavaara (Kannada) Sun NXT - Mar 20

Valavaara

சுதன் கௌடா இயக்கிய படம் `Valavaara'. தொலைந்து போன தன் மாட்டை தேடும் ஒரு சிறுவனின் கதை.

Border 2 (Hindi) Netflix - Mar 20

Border 2

அனுராக் சிங் இயக்கத்தில் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜீத் தோசாஜ் நடித்த படம் `Border 2'. இந்தியா - பாகிஸ்தான் போரை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

Wicked: For Good (English) Jio Hotstar - Mar 21

Wicked For Good

Jon M. Chu இயக்கிய படம் `Wicked: For Good'. சூனியக்காரியான Elphaba மற்றும் Glinda இடையேயான உறவை சொல்லும் படம்.

Theatre: Youth (Tamil) - Mar 19

Youth

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படம் `யூத்'. காதலுக்காக ஏங்கும் பலாலி மாணவனின் இரண்டாண்டு கால பள்ளி வாழ்க்கையை கூறும் படம்.

Ustaad Bhagat Singh (Telugu) - Mar 19

Ustaad Bhagat Singh

பவன் கல்யாண் நடிப்பில் ஹரீஷ் ஷங்கர் இயக்கியுள்ள படம் `Ustaad Bhagat Singh'. போலீஸ் ஹீரோவை எதிர்க்கும் வில்லன், அவரை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதே கதை.

Aadu 3 (Malayalam) - Mar 19

Aadu 3

மிதுன் இம்மானுவேல் தாமஸ் இயக்கியுள்ள படம் `Aadu 3'. சாஜி பாப்பான் மற்றும் அவரது குழுவினர் இருவேறு காலகட்டங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே கதை.

Love Mocktail 3 (Kannada) - Mar 19

Love Mocktail 3

டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்துள்ள படம் `Love Mocktail 3'. ஆதி இம்முறை சந்திக்கும் காதல் சிக்கல்களே கதை

Dhurandhar: The Revenge (Hindi) - Mar 19

Dhurandhar 2

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள படம் `Dhurandhar: The Revenge'. தீவிரவாத கும்பலை அழிக்க ஹம்சா செய்யும் சாகசங்களே கதை.

Bhishmar (Malayalam) - Mar 20

Bhishmar

தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள படம் `Bhishmar'. ஒரு இரவில் இருவருக்கு இடையே நிகழும் மோதல் சம்பவங்களே கதை.