அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அல்லு அர்ஜுனின் 23வது மற்றும் லோகேஷின் 7வது படமாகவும் இப்படம் உருவாகிறது. தற்போது இப்படத்தை பற்றிய சில அப்டேட்ஸ் இதோ...
அல்லு அர்ஜூன் தற்போது அட்லீ இயக்கும் `AA22' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனே லோகேஷின் படத்தில் இணைய உள்ளார். `AA 22' படத்தின் பெருவாரியான காட்சிகள் க்ரீன் மேட்டில் படம்பிடிக்கப்படுகிறது, கிராஃபிக்ஸ் நிறைய பயன்படுத்தப்படும் படமாகவும் உருவாக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. எனவே உறுதியாக ஜூலை மாதத்தில் லோகேஷ் - அல்லு அர்ஜூன் படம் துவங்கும் எனச் சொல்லப்படுகிறது.
மேலும், படத்தின் சில காட்சிகள் IMAX formatல் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், படம் 2027 இரண்டாம் பாதியில் வெளியாகும் என்கிறார்கள். 2027ல் `AA23' வரும் என்பதால் அதற்கு முன்பாக, அதாவது இந்த ஆண்டிலேயே `AA 22'ஐ வெளியிட தீவிரமாக உழைத்து வருகிறார்கள். இவ்விரு படங்களுக்கு பிறகு சுகுமாரின் `புஷ்பா 3' படத்தில் அல்லு அர்ஜூன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.