தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இப்போது அரசியலில் தீவிரமாக இயங்கிவருவதால் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இப்போது இவரது மூத்த மகளான அவந்திகா மலையாளத்தில், `ஆரம்பம்' படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் மக்களின் சினிமா வருகை குறித்து பேசியுள்ளார் குஷ்பூ.
அந்தப் பேட்டியில், "இதில் எங்கள் பங்களிப்பு துளியும் இல்லை. நாங்களே தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறோம். அவளை அறிமுகப்படுத்துவது என்றால் நாங்களே செய்யமாட்டோமா? ஆனால், குழந்தைகள் அவர்கள் விரும்புவதை அவர்களாகவே செய்ய வேண்டும். அடிபட்டாலும் பரவாயில்லை, கீழே விழுந்து எழுந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும். அவளாகவே கதை கேட்கிறாள், அவளாகவே முடிவு செய்கிறாள். சில நேரங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்பார்.
’ஒரு மசாலா பட ஹீரோயினாக இருக்க வேண்டாம், கன்டென்ட் உள்ள படங்களில் நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். மலையாளத்தில் அவர் அப்படியான ஒரு கதையை கேட்டு, பிடித்துப் போக அதில் நடிக்கிறார். படத்தின் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது, அதற்கு நான் போகவில்லை, படத்தின் பூஜைக்கும் நான் போகவில்லை. அவளும் அதை ஏற்றுக் கொண்டு, ’ஷூட் முடித்துவிட்டு வருகிறேன்’ என சொல்லிவிட்டாள்" என்றார் குஷ்பூ.