R J Balaji - Karuppu
R J Balajipt

"`கருப்பு' ரிலீஸ் அப்டேட்..." - உறுதியாக சொன்ன ஆர் ஜே பாலாஜி | Karuppu | R J Balaji | Suriya

கருப்பு பட வேலைகளை திரும்ப துவங்கி இருக்கிறோம். சூர்யா சார் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறீர்கள் என தெரியும். இது மிகப்பெரிய காத்திருப்பு தான்.
Published on

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வர வேண்டியது, ஆனால் சில தாமதங்களால் தள்ளிப்போனது. இப்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் ஆர் ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Karuppu
KaruppuSuriya

அந்த வீடியோவில் "கருப்பு பட வேலைகளை திரும்ப துவங்கி இருக்கிறோம். கண்டிப்பாக இதைக் கேட்டு கேட்டு உங்களுக்கே சலிப்பாக இருக்கும் தான். சூர்யா சார் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறீர்கள் என தெரியும். இது மிகப்பெரிய காத்திருப்பு தான். எனக்கும் அப்படித்தான் இருக்கிறது, கிட்டத்தட்ட 2 வருடங்கள் இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால் உங்கள் காத்திருப்புக்கு தகுந்த ஒரு படமாக இருக்கும். இனிமேலும் காலம் தாழ்த்த நான் விரும்பவில்லை. இன்னும் ஒருவாரம், 10 நாட்களுக்குள் படத்தின் ரிலீஸ் அப்டேட் உடன் வருவோம்.

R J Balaji - Karuppu
"என் அண்ணன், அப்பாவை சாலை விபத்தில் இழந்தேன்!" - ஜூனியர் என்டிஆர் உருக்கம் | NTR

ஆனால் கண்டிப்பாக ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் கிடைத்தது. இடையில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை என்ற செய்திகளும் வந்தது. இது எல்லாமே காத்திருந்த விரக்தியில் இருந்து வரக்கூடிய ரியாக்ஷன் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சீக்கிரமே ரிலீஸ் தேதியோடு உங்களை சந்திக்கிறேன்." எனப் பேசியுள்ளார் ஆர் ஜே பாலாஜி.

R J Balaji - Karuppu
பிரியாணி Vs படம்.. வைரலான கென் கருணாஸ் பதில்! | Ken Karunaas | Youth | Biriyani | Movie
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com