R J Balaji Karuppu
கோலிவுட் செய்திகள்

கருப்பு கிராஃபிக்ஸில் இன்னும் நிறைய குறைகள் இருக்கிறது! - ஆர் ஜே பாலாஜி | R J Balaji | Karuppu

படத்தில் சிங்கம் காட்சிகள் இருக்கிறது என்றால், அதனை எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பயன்படுத்தி படத்தில் சேர்த்திருக்கிறோம்.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கி வெளியான படம் `கருப்பு'. திரையரங்குகளில் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த சூழலில், படத்தின் கிராபிக்ஸ் சார்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பதில் அளித்த ஆர் ஜே பாலாஜி, "ஒரு Head Replacement ஷாட் இருக்கிறது என்றால், அதனைச் சரியாக செய்ய 8 - 10 மாதங்கள் தேவைப்படும். மேலும், அதனைச் செய்யும் நிறுவனத்திற்கு 8 - 10 மாதங்களுக்கு முன்பே கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் சொன்ன நேரத்துக்குள் எங்களால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. அதேநேரம், அதனைப் படத்திலிருந்து நீக்கவும் முடியாது, ஏனென்றால், அவை கதைக்குள் இருக்கின்றன.

Karuppu

படத்தில் சிங்கம் காட்சிகள் இருக்கிறது என்றால், அதனை எவ்வளவு குறைவாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பயன்படுத்தி படத்தில் சேர்த்திருக்கிறோம். தியேட்டரில் இதைப் பெரிய குறையாகச் சொல்லவில்லை. ஆனால், ஓடிடியில் வந்ததும் சொல்கிறார்கள் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். எங்களால் சரிவர செய்ய முடியவில்லை. எங்களுக்குப் பல கட்டுப்பாடுகள் இருந்தது. அதற்காக, அதனை யாரும் சுட்டிக்காட்டக் கூடாது என எதிர்பார்க்கக் கூடாது.

மக்கள் தவறாக இருந்தால் திட்டத்தான் செய்வார்கள். ஓடிடிக்கு வந்த பின்னர், குறைகளாகச் சொல்லப்படுவது இதுபோன்ற சில விஷயங்கள்தான். மற்ற விஷயங்களைப் பாராட்டுகிறார்கள் எனும்போது, இந்தக் குறைகளை நாம் ஏற்கத்தான் வேண்டும். இதனால்தான் நடக்கவில்லை எனக் காரணங்கள் சொல்ல விரும்பவில்லை.

R J Balaji

கண்டிப்பாக, காரணங்கள் நிறைய இருக்கிறது. ஆனால், அதனைச் சொல்ல தேவை இல்லை. குறை என்பதை ஏற்க வேண்டும். இனி அடுத்தமுறை இதுபோன்ற விஷயங்களை இன்னும் சிறப்பாகத் திட்டமிடுவோம். நான் தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது, தியேட்டரில் இதெல்லாம் தெரியாது. ’ஒரு மேஜிக் நடக்கும்’ என்றேன். ஓடிடியில் பாஸ் செய்து பார்த்து அடிப்பார்கள். பாராட்டும்போது நன்றாக இருந்ததல்லவ? அடிக்கும்போது அதையும் ஏற்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் சொல்வதைவிட இன்னும் நிறைய குறைகள் இருக்கின்றன. அதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் சிறப்பான செயல்படுவோம்" என்றார்.