கரண் - கனிஷ்க் இயக்கியுள்ள சீரிஸ் `Glory'. குடும்ப சண்டையால் பிரிந்த தந்தையும் இரு மகன்களும் மீண்டும் ஒரு பாக்சிங் போட்டிக்காக ஒன்று சேர, அதன் பின் நடப்பவையே கதை.
அனிஷ் ஷுக்லா இயக்கத்தில் 2020ல் வெளியான சீரிஸ் `Undekhi'. இப்போது இதன் நான்காவது மற்று இறுதி சீசன் வெளியாகிறது. அதிகாரம் படைத்தவர்களுக்கு எளிய மனிதர்களுக்கும் இடையேயான மோதலே கதை.
Nia DaCosta இயக்கத்தில் Ralph Fiennes நடித்த படம் `28 Years Later: The Bone Temple'. மருத்துவர் கேல்சனின் ஒரு மருத்துவ கண்டுபிடிப்பை பற்றி கூறும் படம்.
நடராஜ், தம்பிராமையா நடித்த படம் `TN 2026'. வடமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு பிழைக்க வந்து, சினிமா நடிகராகி, பின்னர் அரசியலுக்கு செல்லும் நபரின் கதை.
செல்வராகவன், குஷி ரவி நடித்துள்ள படம் `மனிதன் தெய்வமாகலாம்'. மோசமான மனிதர்களுக்கு எதிராக ஹீரோவின் போராட்டமே கதை.
சங்கீத் சோபன், நயனா நடித்த படம் `Raakaasa'. தனது காதலுக்காக சொந்த ஊர் வரும் இளைஞர் செய்யும் ஒரு தவறு, அந்த ஊரையே ஆபத்தில் சிக்க வைக்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
ஷர்வானந்த் நடித்த படம் `Biker'. பைக் ரேசர் நாயகனின் பயணமே கதை.
தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. தன்னை சார்ந்த மனிதர்களை பாதுகாக்க ஹீரோ செய்யும் செயல்களே கதை.
பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள படம் `KD The Devil'. அண்டர்வேர்ல்ட் டான்களுக்கு இடையேயான மோதலே படம்.
ரிதேஷ் ராணா இயக்கத்தில் சத்யா, வெண்ணலா கிஷோர் நடித்துள்ள படம் `Jetlee'. கொள்ளை சம்பவத்தை மையப்படுத்திய காமெடி படம்.
மோகன்லால், மம்மூட்டி நடிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள படம் `Patriot'. நாட்டை காப்பாற்ற நடக்கும் ஒரு மிஷன் தான் கதை.
ரிதேஷ் தேஷ்முக் இயக்கி நடித்துள்ள படம் `Raja Shivaji'. சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது.
ஜூனைத் கான், சாய் பல்லவி நடித்துள்ள படம் `Ek Din'. தினேஷுக்கு மீரா மேல் ஒருதலை காதல். தினேஷ் செய்யும் ஒரு விஷயத்தால் இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் ஏற்படும் குழப்பங்களே கதை.
David Frankel இயக்கத்தில் Meryl Streep, Anne Hathaway, Emily Blunt நடித்துள்ள படம் `The Devil Wears Prada 2'. கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக ஃபேஷன் உலகில் நடக்கும் மோதல்களை மையப்படுத்தியது.