Suriya Jyotika
கோலிவுட் செய்திகள்

”சூர்யா என்னுடன் சேர்ந்து சமைப்பார்!” - ஜோதிகா | Suriya | Jyotika

சூர்யா மிகச்சிறந்தவர். ஒரு மனிதராக, ஒரு கணவராக மற்றும் ஒரு நடிகராக எல்லாவற்றிலும் சிறந்தவர்.

Johnson

தமிழ் சினிமாவில் ஸ்டார் தம்பதி சூர்யா - ஜோதிகா. தனிப்பட்ட விதத்தில் சூர்யா பல இடங்களில் ஜோதிகா தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர் எனப் பேசி இருக்கிறார். கூடவே ஜோதிகாவும் சூர்யாவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில் சூர்யா பற்றி ஜோதிகா சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

Suriya

அதில் ’காக்க காக்க’ படத்தில் ஜோதிகா சம்பளத்தைவிட சூர்யா சம்பளம் குறைவு. அதை எல்லாம் நீங்கள் பொருட்படுத்தும் நபராக இல்லை. எப்போதும் இவர் இப்படித்தானா என ஜோதிகாவிடம் கேட்டபோது, "சூர்யா மிகச்சிறந்தவர். ஒரு மனிதராக ஒரு கணவராக மற்றும் ஒரு நடிகராக எல்லாவற்றிலும் சிறந்தவர். அவர் சிந்தனையில் எப்போதும் சமத்துவம் இருக்கிறது. அடிப்படையிலேயே அப்படியான எண்ணம் இருப்பவர்களால்தான் அதனை வெளிப்படுத்த முடியும். இல்லை என்றால், அவர்களின் செயல்களில் இவை பிரதிபலிக்காது. அவர்களால்தான் தங்களுடன் இருக்கும் பெண்ணின் விருப்பத்தை மதிக்க முடியும். நான் இங்கே பெண்ணியவாதியாக பேசவில்லை. ஆனால், வீட்டில் நாங்கள் இருவரும் சமம். மேலும் அது உன்னதமான ஒரு மனிதனின் உள்மனதில் இருந்து வருவதால்தான் சாத்தியமாக இருக்கிறது. நான் சமையல் செய்தால் சூர்யாவும் என்னுடன் இணைந்து சமையல் செய்வார். படம், குழந்தை வளர்ப்பு, விடுமுறைக் கொண்டாட்டங்கள் என எல்லாவற்றையும் நாங்கள் இணைந்துதான் செய்கிறோம். ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு இன்னொருவர் மகிழ்கிறோம்" எனக் கூறியுள்ளார் ஜோதிகா.