விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள `ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பெயர் ஒரு பேரே வரலாறு எனவும், பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிப்பு.
அல்லு அர்ஜூன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் இரு பாகங்காள உருவாக்கப் போகிறது என தகவல் உலவி வருகிறது. படத்தின் பட்ஜெட் கூடுவதை சமன் செய்ய இந்த திட்டமாம். முதல் பாகம் 2026 இறுதியிலும், அடுத்த பாகம் அடுத்த சில மாதங்களிலும் வெளியிட திட்டம் என சொல்லப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் `அரசன்' படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இப்படம் பற்றி ஒரு விழாவில் கேட்கப்பட்ட போது "இந்தப் படத்தின் கதையோ, எத்தனை நாட்கள் நடிக்க வேண்டும் என்பதோ தெரியாது எனவும், வெற்றியை நம்பி போகிறேன்" எனவும் கூறி இருக்கிறார்.
AI தவறாக பயன்படுத்தி பல அத்துமீறல்கள் தொடர்சியாக அதிகரித்து வருகின்றன. இது குறித்து பல நடிகைகள் புகார் எழுப்பி வரும் நிலையில் இன்று நடிகை ஸ்ரீலீலா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் இது பற்றிய தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
பொன்ராம் இயக்கத்தில் சண்முகப்பாண்டியன், சரத்குமார் நடித்துள்ள `கொம்பு சீவி' படத்தின் `கருப்பன்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் நடித்துள்ள `தி ராஜாசாப்' படத்தின் `சஹானா சஹானா' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது
நீரஜ் பாண்டே இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி இயக்கியுள்ள `Taskaree' சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸ் ஜனவரி 14ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
நீரஜ் கெய்வான் இயக்கத்தில் உருவான Homebound இந்திப்படம் 98வது ஆஸ்கர் விருதுகளுக்கு சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியா சார்பாக அனுப்பப்பட்டது. மொத்தமாக தகுதி பெற்ற 86 படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உருவான 15 படங்கள் கொண்ட ஷார்ட்லிஸ்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ளது Homebound.
சத்ரபதி சிவாஜி கதையை மையமாக வைத்து நடிகர் ரிதேஷ் தேஷ்முக் இயக்கி நடித்து வந்த `Raja Shivaji' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள `Disclosure Day' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தாதுனு ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது.