
சதாசிவம் இயக்கத்தில் குரு லக்ஷ்மன், பாடினி நடித்துள்ள சீரிஸ் `Heartiley Battery'. காதலை விட சைன்ஸை நம்பும் ஒரு பெண், காதலை அளக்கும் கருவி ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதன் பின் வரும் சிக்கல்கள் தான் கதை.
ஜோனாதன் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள Fallout சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகிறது. அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகான அமெரிக்காவில் வரும் சவால்களே கதை.
ஸ்வாதி பிரகாஷ் இயக்கியுள்ள சீரிஸ் `Nayanam'. கண் மருத்துவர் ஒருவரின் பரிசோதனை முயற்சியால் வரும் சிக்கல்களே கதை.
அனிருமா ஷர்மா இயக்கத்தில் வர இருக்கிறது `Four More Shots Please' நான்காவது சீசன். நான்கு தோழிகளின் வாழ்க்கையை பற்றிய கதையான இதன் கடைசி அத்யாயம் இந்த சீசன்.
நாகேஷ் குக்னூர் இயக்கத்தில் மாதுரி தீக்ஷித் நடித்துள்ள சீரிஸ் `Mrs Deshpande'. முன்னாள் சீரியல் கொலைகாரியான நாயகி, தன்னுடைய பாணியிலேயே கொலை செய்யும் புது சீரியல் கில்லரை கண்டுபிடிக்க முயல்வதே கதை.
கபீர் லால் இயக்கத்தில் பார்வதி நாயர் நடித்துள்ள படம் `உன் பார்வையில்'. பார்வை சவால் கொண்ட பெண்ணின் கதையாக உருவாகி இருக்கிறது.
ஹனி தெஹ்ரான் இயக்கத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ள படம் `Raat Akeli Hai'. அரசியல்வாதி ஒருவர் தன் திருமண நாளில் வேறொரு பெண்ணுடன் இறந்துகிடக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவலதிகாரின் கதையே படம்.
ஆதித்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா நடித்த படம் `Thamma'. வேதாள இனத்தை சேர்ந்த பெண் மனித ஆணை காதலிக்கும் கதை.
சாய்லு இயக்கியுள்ள படம் `Raju Weds Rambai'. கம்மம் - வாரங்கள் பகுதியில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக கொண்ட காதல் கதை.
ப்ரியதர்ஷி, ஆனந்தி நடித்த படம் `Premante'. கணவரின் செயல்பாடுகளை சந்தேகிக்கும் மனைவி என்ன தெரிந்து கொள்கிறார் என்பதே கதை.
கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம் `Dominic and The Ladies' Purse'. டோமினிக் ஒரு முன்னாள் காவலதிகாரி, இந்நாள் டிடெக்டிவ். தொலைந்து போன பர்ஸ் ஒன்றை அதன் உரிமையாளரிடம் சேர்க்கும் மிஷனை அவர் கையில் எடுக்க, அது எதிர்பாராத பல சிக்கல்களை கொண்டு வருகிறது. அந்த பர்ஸ்க்கு பின் இருக்கும் பூதாகர பிரச்சனை என்ன என்பதே படம்.
David Michôd இயக்கத்தில் ஸ்விட்னி ஸ்வீனி நடித்த படம் `Christy'. Christy Salters என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
திலீப் நடித்துள்ள படம் `Bha Bha Ba'. ஒரு கொள்ளைக்காரனுடன் மூன்று வாழ்க்கை இணையும் கதை.
பொன்ராம் இயக்கத்தில் சண்முகப்பாண்டியன், சரத்குமார் நடித்துள்ள படம் `கொம்பு சீவி'. 96ல் வைகை அணை பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் நடந்த உண்மை சம்பவமே கதை.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள படம் `Avatar: Fire and Ash'. இம்முறை நவி இன மக்கள் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதே கதை.