Vetrimaaran, Simbu Arasan
கோலிவுட் செய்திகள்

`மதுரை டைகர்' சிம்பு... அரசன் பட அப்டேட் | Arasan Updates | Simbu | Vetrimaaran

டிசம்பர் 8ம் தேதி எளிமையான முறையில் படப்பூஜை நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று (நவ 9) படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

Johnson

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படம் 'அரசன்'. இப்படத்தின் புரோமோ வெளியானதில் இருந்து படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவானது. மேலும் இது வடசென்னை உலகத்தில் நிகழும் கதை என்பதும், படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பதும் கூடுதல் சர்ப்ரைஸ் ஆக சேர்ந்துள்ளது. இதன் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், ஒருவழியாக நேற்று கோவில்பட்டியில் படப்பிடிப்பு துவங்கிவிட்டது.

சமீபத்தில் மலேசியாவுக்கு நகைக்கடை திறப்பு ஒன்றுக்காக சென்ற சிலம்பரசன், இன்னும் மூன்று நாட்களில் 'அரசன்' படப்பிடிப்பில் இணைவதை உறுதிப்படுத்தினார். அதன்படி டிசம்பர் 8ம் தேதி எளிமையான முறையில் படப்பூஜை நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று (நவ 9) படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கு முன்னரே வெற்றிமாறனும் அவரது யூனிட்டும் சில வாரங்களுக்கு முன்பாக கோவில்பட்டி பகுதிகளில் லொக்கேஷன்களை பார்த்துத் திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய படப்பிடிப்பின் போது ரசிகர்கள் பலர் வர, அவர்களை சந்தித்து திரும்பி இருக்கிறார் சிம்பு.

Simbu

இதில் 45 வயது தோற்றம் மற்றும் இளம் வயது தோற்றம் என இருவேறு காலகட்டங்களில் சிம்பு வருவது போல காட்சிகள் இருக்கிறது. அதனை படத்தின் புரோமோ வீடியோவிலேயே பார்த்திருப்போம். எனவே இளம் வயது சிம்பு கேரக்டருகாக அவரிடம் 12 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருந்தார் வெற்றிமாறன்.  சிம்பு இதற்காக, சில வாரங்களுக்கு முன்னரே துபாய்க்கு சென்று படத்திற்கான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

முதற்கட்டமாக கோவில்பட்டியில் நேற்று துவங்கியிருக்கும் படப்பிடிப்பு மூன்று வாரங்கள் நடைபெறும் என சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியான சிம்புவின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பார்க்கையில், அவரது டீசர்ட்டில் `மதுரை டைகர்' என எழுதப்பட்டிருந்தது. ஒருவேளை இது சிம்புவின் கதாபாத்திர பெயராக இருக்கலாம். மதுரையில் தொடங்கும் கதை, வட சென்னை வரை வருகிறது என்றும் சொல்கிறார்கள். விளையாட்டு வீரராக அவர் கேம் ஆடும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சில ஆக்‌ஷன் காட்சிகளும் எடுக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து எடுக்க போகும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைவார் எனவும் தகவல்.