Kamalhaasan, Bharathiraja web
கோலிவுட் செய்திகள்

"நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!" - கமல்ஹாசன் | Kamalhaasan | Bharathiraja

அந்த நற்பண்பாளர் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால், அவரது நட்பு தொடரும்; அவரது கலை என்றும் நிலைத்திருக்கும்.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், "அந்த நற்பண்பாளர் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால், அவரது நட்பு தொடரும்; அவரது கலை என்றும் நிலைத்திருக்கும். நான் அவரது இழப்பை எண்ணிப் பார்க்கவில்லை; மாறாக, அவர் ஈட்டிய நன்மைகளையே கணக்கில் கொள்கிறேன். அவர் நம்மிடையே இருந்தார்; என்னுடன் இணைந்து திரைப்படங்களை உருவாக்கினார்; அதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.

பாரதிராஜாவின் முதல் படமான `பதினாறு வயதினிலே' படத்தில் நாயகன் கமல்ஹாசன்தான். பின்னர் `சிகப்பு ரோஜாக்கள்', `ஒரு கைதியின் டைரி', `டிக் டிக் டிக்' ஆகிய படங்களில் கமல் - பாரதிராஜா கூட்டணி இணைந்து பணியாற்றியது. சினிமாவில் இவர்களின் நட்பும் மிகப்பெரியது.